27 Nakshatras in All Languages

No Sanskrit Tamil Malayalam Telegu Kanada Bengali
1 Aśvinī

अश्विनी

Aswini

அஸ்வினி

Ashvati

അശ്വതി

Aśvinī

అశ్విని

Aśvinī

ಅಶ್ವಿನಿ

Aśvinī

অশ্বিনী

2 Bharaṇī

भरणी

Baraṇi

பரணி

Bharaṇi

ഭരണി

Bharaṇi

భరణి

Bharaṇi

ಭರಣಿ

Bharaṇī

ভরণী

3 Kṛttikā

कृत्तिका

Kārthikai

கார்த்திகை

Kārttika

കാർത്തിക

Kṛttika

కృత్తిక

Kruthike

ಕೃತಿಕೆ

Kṛttikā

কৃত্তিকা

4 Rohiṇī

रोहिणी

Rōhiṇi

ரோகிணி

Rōhiṇi

രോഹിണി

Rōhiṇi

రోహిణి

Rōhiṇi

ರೋಹಿಣಿ

Rohiṇī

রোহিণী

5 Mṛgaśiras

म्रृगशीर्षा

Mirugasīridam

மிருகசீரிடம்

Makayiram

മകയിരം

Mṛgaśira

మృగశిర

Mṛgaśira

ಮೃಗಶಿರ

Mṛgaśiras

মৃগশিরা

6 Ārdrā

आद्रा

Thiruvādhirai

திருவாதிரை

Ātira or Tiruvātira Arudra

ఆరుద్ర

Aridra

ಆರಿದ್ರ

Ārdrā

আর্দ্রা

7 Punarvasu

पुनर्वसु

Punarpoosam

புனர்பூசம்

Puṇartam

പുണർതം

Punarvasu

పునర్వసు

Punarvasu

ಪುನರ್ವಸು

Punarvasu

পুনর্বসু

8 Puṣya

पुष्य

Poosam

பூசம்

Pūyam

പൂയം

Puṣyami

పుష్యమి

Puṣya

ಪುಷ್ಯ

Puṣya

পুষ্যা (তিষ্যা)

9 Aśleṣā

आश्ळेषा / आश्लेषा

Ayilyam

ஆயில்யம்

Āyilyam

ആയില്യം

Aśleṣa

ఆశ్లేష

Aśleṣa

ಆಶ್ಲೇಷ

Aśleṣā

অশ্লেষা

10 Maghā

मघा

Magam

மகம்

Makam

മകം

Makha or Magha

మఖ or మాఘ

Makha

ಮಖ

Maghā

মঘা

11 Pūrva or Pūrva Phalguṇī Pooram

பூரம்

Pūram

പൂരം

Pūrva Phalguṇī or Pubba Pubba

ಪುಬ್ಬ

Pūrva or Pūrva Phalguṇī
12 Uttara or Uttara Phalguṇī

उत्तर फाल्गुनी

Uthiram

உத்திரம்

Utram

ഉത്രം

Uttara Phalguṇi or Uttara Utthara

ಉತ್ತರ

Uttara or Uttara Phalguṇī

উত্তর ফল্গুনী

13 Hasta

हस्त

Astham

அஸ்தம்

Attam

അത്തം

Hasta

హస్త

Hasta

ಹಸ್ತ

Hastaহস্তা
14 Citrā

चित्रा14

Chithirai

சித்திரை

Chittira (Chitra) Cittā or Citrā

చిత్తా or చిత్రా

Citta

ಚಿತ್ತ

Citrā

চিত্রা

15 Svāti

स्वाति

Swathi

சுவாதி

Chōti

ചോതി

Svāti

స్వాతి

Svāti

ಸ್ವಾತಿ

Svāti

স্বাতী

16 Viśākha

विशाखा

Visakam

விசாகம்

Vishākham

വിശാഖം

Viśākha

విశాఖ

Viśākhe

ವಿಶಾಖೆ

Viśākha

বিশাখা

17 Anurādhā

अनुराधा

Anusham

அனுஷம்

Anizham

അനിഴം

Anurādhā

అనూరాధ

Anurādhā

ಅನುರಾಧ

Anurādhā

অনুরাধা

18 Jyeṣṭha

ज्येष्ठा

Kettai

கேட்டை

Kēṭṭa (Trikkēṭṭa)

കേട്ട (തൃക്കേട്ട)

Jyeṣṭha

జ్యేష్ఠ

Jyeṣṭha

ಜ್ಯೇಷ್ಠ

Jyeṣṭha

জ্যেষ্ঠা

19 Mūla

मूल/मूळ

Mūlam

மூலம்

Mūlam

മൂലം

Mūla

మూల

Mūla

ಮೂಲ

Mūla

মূলা

20 Pūrvāṣāḍha

पूर्वाषाढा

Pūradam

பூராடம்

Pūrāṭam

പൂരാടം

Pūrvāṣāḍha

పూర్వాషాఢ

Pūrvāṣāḍha

ಪೂರ್ವಾಷಾಢ

Pūrvāṣāḍha

পূর্বাষাঢ়া

21 Uttarāṣāḍha

उत्तराषाढा

Uthirādam

உத்திராடம்

Utrāṭam

ഉത്രാടം

Uttarāṣāḍha

ఉత్తరాషాఢ

Uttarāṣāḍha

ಉತ್ತರಾಷಾಢ

Uttarāṣāḍha

উত্তরাষাঢ়া

22 Śravaṇa

श्रवण

Tiruvōnam

திருவோணம்

Tiruvōnam Śravaṇaṁ

శ్రవణం

Śravaṇa

ಶ್ರವಣ

Śravaṇa

শ্রবণা

23 Śraviṣṭhā or Dhaniṣṭha Aviṭṭam

அவிட்டம்

Aviṭṭam

അവിട്ടം

Dhaniṣṭha

ధనిష్ఠ

Dhaniṣṭha

ಧನಿಷ್ಠ

Śraviṣṭhā or Dhaniṣṭha

ধনিষ্ঠা (শ্রবিষ্ঠা)

24 Śatabhiṣak or

Śatatārakā

Sadayam

சதயம்

Chatayam

ചതയം

Śatabhiṣaṁ

శతభిషం

Śatabhiṣa

ಶತಭಿಷ

Śatabhiṣak or Śatatārakā

শতভিষা

25 Pūrva Bhādrapadā Pūraṭṭādhi

பூரட்டாதி

Pūruruṭṭāti

പൂരുരുട്ടാതി

Pūrvābhādra

పూర్వాభాద్ర

Pūrvābhādra

ಪೂರ್ವಾ ಭಾದ್ರ

Pūrva Bhādrapadā

পূর্ব ভাদ্রপদ

26 Uttara Bhādrapadā Uttṛṭṭādhi

உத்திரட்டாதி

Uttṛṭṭāti

ഉത്രട്ടാതി

Uttarābhādra

ఉత్తరాభాద్ర

Uttarābhādra

ಉತ್ತರಾ ಭಾದ್ರ

Uttara Bhādrapadā

উত্তর ভাদ্রপদ

27 Revatī

रेवती

Rēvathi

ரேவதி

Rēvati

രേവതി

Rēvati

రేవతి

Rēvati

ರೇವತಿ

Revatī

রেবতী

 

27 நட்சத்திரங்களுடைய பொதுவான பலன்கள்

அசுவினி

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், நல்ல புத்திசாலியாகவும், பலராலும், விரும்பி நேசிக்கப்பட்டவராகவும், செல்வந்தராகவும், நன்கு வளர்க்கப்பட்டவராகவும் விளங்குவீர்கள். அத்துடன் பிறருக்கு மரியாதை காட்டும் பண்பாடும் உண்மைபேசும் குணமும், எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதான சுபாவமும் உங்களிடம் காணப்படும். நீங்கள் உங்கள் தொழிலில், பயிற்சி பெற்றவராக விளங்குவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன், நீங்கள் நல்ல உறவுகளைப் பராமரித்து வருவீர்கள். நீங்கள் நல்ல உடையுடுத்திடுவதிலும் ஆபரணங்களிலும் ஆசை கொண்டவர். உங்களுடைய 20 – வது வயதிலிருந்து, நீங்கள் நல்ல அதிருஷ்டசாலியாக இருப்பீர்கள். குந்த் முல நகூஷத்திரத்தில் நீங்கள் பிறந்திருப்பதால், பூஜைகளைச் செய்திடவேண்டும்

பரணி

பரணி நட்சத்திரம் தரணி கட்டி ஆள்வார்கள் என்பது ஜோதிட வாக்காகும்.நல்ல முயற்சியான உழைப்பு இருந்தால் இது சாத்தியமாகும். நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், உங்களைப் பற்றி தவறாக யார் சொன்னாலும் அதை பொருட்படுத்தாமல் வாழ்வில் வெற்றி பெற போராடுவீர்கள்.சில நேரங்களில் உங்களது போராட்டங்களில் பின்னடைவு ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி கிட்டும்.

கார்த்திகை

இந்த நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தவராதலால், இள வயதிலேயே கஷ்டங்களையும்,போராட்டங்களையும் சந்திக்கவேண்டி வரும்.யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் முன்னேறக்கூடியவர்கள். உங்கள் பண நிலைமை, சிறப்பாக இராது.உங்களுக்கு பளிச்சென்ற நல்ல தோற்றமிருக்கும் நீங்கள் பரவலாகப் புகழ்பெற்று விளங்குவீர்கள். நேர்மையும்,நாணயமும் கொண்டவர்கள். உங்களுக்கு ஒதுக்கப்படும் வேலைகளை முடித்துக் கொடுக்கும் திறமை, உங்களுக்கு இருக்கிறது.

ரோகிணி

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், நீங்கள் தெய்வ ஈடுபாடு கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு விவசாயம் முலமாகத்தான், முக்கியமாக வருமானம் கிடைக்கும். நீங்கள், நல்ல அழகிய தோற்றமுடையவராகவும், புத்திசாலியாகவும், புதிர்களுக்கு விடை கண்டுபிடிப்பதில் மிகுந்த சாமர்த்தியசாலியாகவும் விளங்குவீர்கள்

மிருகசீரிசம்

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், போரிலும், போர்சார்ந்த உத்திகளிலும், தந்திரங்களிலும் வெற்றி காண்பீர்கள். மற்றவர்களிடம் மரியாதையோடும் பண்போடும் பழகுவீர்கள் உணர்ச்சி வெறியுடைய உங்களுக்கு, அரசு உயர் அதிகாரிகள் நல்ல மதிப்பும் மரியாதையும் அளிப்பார்கள். நேர்த்தியானவற்றை நன்கு உணர்ந்து பாராட்டக்கூடிய நீங்கள் எப்போதுமே, சரியான பாதையைத்தான் தெரிந்தெடுப்பீர்கள்.

திருவாதிரை

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணமைக்கு மாறாக எதையும் செய்ய மாட்டார்கள். அறிவுத் திறன்பெற்ற புத்திசாலியாக இருப்பீர்கள். பிறருக்கு தர்மம் செய்துஅதில் மகிழ்ச்சிகாண முயலும் நீங்கள், பல சமயங்களில், முன் கோபம் கொண்டவராகவும், வருங்காலத்தில் நல்ல நம்பிக்கை கொண்ட தைரியசாலியாகவும் விளங்குவீர்கள். உங்கள் வாழ்க்கையில், சாதாரணமாக பல வசதிகளும் சுகபோகங்களும் இராது நீங்கள் கடினமான வாழ்க்கை நடத்த வேண்டியிருக்கலாம் நீங்கள் செலவாளியாக இருப்பதுடன், துன்பங்கள்நேரிடும்போதும், மனம் கலங்காமல் இருப்பவர்.

புனர்பூசம்

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், நீங்கள் பொறுமைசாலியாகவும், அமைதியான சுபாவமுடையவராகவும் இருப்பீர்கள் நல்ல குணத்துடன், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அன்புக்கும், பிரியத்துக்கும் பாத்திரமானவராக விளங்குவீர்கள். உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் கிடைக்கும் நீங்கள் தாராள சிந்தையுடையவராக இருப்பீர்கள். குழந்தைகள் முலம் மன நிறைவு பெற்று, நல்ல செல்வந்தராக விளங்குவீர்கள். மதிப்பு வாய்ந்த ரத்தினக் கற்களில் உங்களுக்கு மிகுந்த ஈடுபாடு இருக்கும் சொந்தத்தில் சொத்துக்களும் இருக்கும். நீங்கள் விரிவாக, பல இடங்களில் பயணம் செய்வீர்கள்.

பூசம்

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், உங்கள் விருப்பங்கள்மீது, உங்களுக்குக் கட்டுப்பாடு இருக்கும் பொதுவாக பலரும் உங்களை விரும்பி நேசிப்பார்கள் சமய ஈடுபாடும், தாராள சிந்தையும், மற்றவர்களுக்கு உதவிடும் மனப்பான்மையும், உங்களிடம் காணப்படும். நீங்கள், நன்கு படித்த புத்திசாலியாகவும், தெய்வ நம்பிக்கையுடன், உண்மையில் உறுதி கொண்டவராகவும் இருந்து, வசதியான வாழ்க்கை நடத்துவீர்கள். நீங்கள் மிகுந்த அதிருஷ்டசாலியாகவும், செல்வந்தராகவும், நல்ல உடல்கட்டு அமைந்தவராகவும் விளங்குவீர்கள்.

ஆயில்யம்

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால்,வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் கூட எளிமையாக இருப்பார்கள் . உங்கள் தந்தை, தாய் அல்லது உங்கள் வயதுடைய மற்றவர்கள் மிகுந்த மரியாதை வைத்திருப்பீர்கள்.நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உதவிக்காக போய் நிக்க மாட்டீர்கள்.மதுபழக்கம் வராமல் பார்த்துகொள்வது நல்லது.சில சில சிரமங்களை அனு8பவித்தாலும் யாரிடமும் வெளியில் காட்டிகொள்ளமாடீர்கள்.

மகம்

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், நல்ல செல்வந்தராகவும், புத்திசாலியாகவும், பிறரிடம் கருணை காட்டி உதவி செய்பவராகவும் இருப்பீர்கள். நீங்கள் வியாபாரத்தில் வெற்றி காண்பதுடன், சுகபோகமான வாழ்க்கையொன்றும் நடத்துவீர்கள். உங்களுக்கு பல பணியாட்கள் இருப்பார்கள் தெய்வகாரியங்களில் உங்களுக்கு ஈடுபாடு இருக்கும். உங்கள் மனைவியுடன் சுமுகமான உறவுகளை கொண்டிருப்பீர்கள். உங்கள் பெற்றோர்களிடம், கடமைப் பற்றுடன் நடந்து கொண்டாலும், எதிலும் கண்டிப்பாக இருக்கக்கூடிய, ஒரு கடும் சுபாவம், உங்களிடம் குடிகொண்டிருக்கும். உங்கள் எண்ணமும் செயலும், தெளிவானதாய், திட்டவட்டமானதாக அமைந்திருக்கும்.

பூரம்

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், மென்மையாக பேசும் குணம் உடையவராகவும், சமயப்பற்றும், துணிச்சலும், தாராள சிந்தையும், பகைவர்களை வெற்றி கொள்ளும் சாதுர்யமும், தந்திரபுத்தியும் கொண்டவராக இருப்பீர்கள். நீங்கள், காமவெறி உணர்ச்சியும், கர்வமும் கொண்டிருப்பீர்கள். நிதிநிலை, அவ்வளவு வசதியாக இராது.

உத்திரம்

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், நீங்கள், கருணை உள்ளம் நிறைந்தவராகவும், பொறுமை மிக்கவராகவும், நல்ல பண்பாடான நடத்தை கொண்டவராகவும், பலராலும் விரும்பி நேசிக்கப்படுபவராகவும் விளங்குவீர்கள். நீங்கள், உங்கள் சொந்த சம்பாதிப்புடன், சுகபோகமாக வாழ்க்கை நடத்துவீர்கள். உங்கள் உடல் எடை அதிகரித்திடலாம் கவனம் தேவை

அஸ்தம்

நீங்கள் இந்த நட்சத்த்திரத்தில் பிறந்திருப்பதால், மிகுந்த விவேகியாகவும், தாராள மனம் கொண்டவராகவும், செல்வந்தராகவும், பலராலும் விரும்பி நேசிக்கப்படுபவராகவும் விளங்குவீர்கள். துறவிகளிடம் உங்களுக்கு நம்பிக்கை இருக்கும். 30 லிருந்து 32 வயது வரையான காலத்தில் நீங்கள் முன்னேறுவீர்கள்

சித்திரை

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், தரம சிந்தனை இருக்கும்.அன்பான குணம் கொண்டவர்களைமிகவும் விரும்புவீர்கள். போர், உத்திகள் பற்றிய பல விஷயங்கள், உங்களுக்குத் தெரிந்திருக்கும். படிப்பும், அறிவும், பணமும் படைத்தவரான நீங்கள், சத்திய வாதியாக விளங்குவீர்கள். உங்கள் மனைவியும் குழந்தைகளும், உங்களுக்கு மன மகிழ்ச்சி தருவார்கள். நல்ல வசதியான வாழ்க்கை நடத்தப்போகும் நீங்கள் கடின உழைப்பாளியாகவும், துணிச்சல் மிக்கவராகவும், பொருள் ஆர்வம் கொண்டவராகவும் விளங்குவீர்கள். கட்டிடங்கள் கட்டுவது, வைத்தியம், ஜோதிடம் ஆகியவற்றில், உங்களுக்கு நல்ல அறிவாற்றல் இருக்கும். நீங்கள் சமயப்பற்றும், தெய்வ பக்தியும் கொண்டிருப்பீர்கள். நீங்கள் பணம் சம்பாதித்தாலும் பணம் சேர்த்து வைத்திட முடியாது.

சுவாதி

நீங்கள் இந்த நட்சத்த்திரத்தில் பிறந்திருப்பதால், நல்ல அழகிய தோற்றத்துடனும், மகிழ்ச்சியான சுபாவத்துடனும், விளங்குவீர்கள் உங்களுக்கு சமயப்பற்று இருக்கும் தர்ம காரியங்களுக்காக நன்கொடை அளிப்பீர்கள். நீங்கள், உங்கள் உணர்ச்சிவெறிகளை கட்டுப்படுத்தி வைத்திடும் ஆற்றல் பெறுவீர்கள் .மனதில் ஏற்படும் காம எண்ணங்களை குறைத்துகொள்வது நல்லது.வியாபாரத்தில் தேர்ச்சி பெற்றவராக விளங்குவதுடன், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனும் நல்லுறவுகளைப் பராமரிப்பீர்கள்.

விசாகம்

நீங்கள் இந்த நtsaத்திரத்தில் பிறந்திருப்பதால், சமயப் பற்றும், தெய்வ பக்தியும் கொண்டவராக இருப்பீர்கள் ஆனால் பொறாமையும், பகைமை உணர்வும் உங்களிடம் இருக்காது.இயற்கையிலேயெ ஞானமும்,அறிவும் இருக்கும் உங்கள் மனநிலை சில நேரம் சஞ்சலம் கொண்டதாக இருந்தாலும் பின் தெளிவாகிவிடுவீர்கள்.

அனுஷம்

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், இள வயதிலேயே சிரமப்பட்டாலும்,பிற்காலத்தில் நல்ல செல்வந்தராகவும், பெரும்பாலும் அயல் நாட்டில் வசிக்கக் கூடியவராகவும் இருப்பீர்கள். பயணம் செய்வதில் உங்களுக்கு நல்ல விருப்பமிருக்கும். நீங்கள் நன்கு படித்துத் தேர்ச்சி பெற்றவராகவும், பணம் ஈட்டுவதில் படுசாமர்த்தியசாலியாகவும் இருப்பதுடன், நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும், உதவியும் செய்வீர்கள்.

கேட்டை

இந்த நட்சத்திரத்திரத்தில் பிறந்தவராதலால், அழகான குணமும்,மனதில் அன்பும் இருக்கும்.பலவிதமான கலைகளை கற்பார்கள்.போராட்டமான வாழ்வு அமைந்தாலும் பிற்காலத்தில் மிகுந்த புகழ் பெற்றவராக இருப்பார்கள்.யாரையும் பொருபடுத்தாமல் வாழ்க்கூடியவர்கள்.

மூலம்

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், நீங்கள் பணக்காரராகவும், மகிழ்ச்சி நிறைந்தவராகவும் இருப்பீர்கள். நீங்கள், மற்றவர்களுக்கு தீங்கு விளைவித்திடமாட்டீர்கள் மிகவும் உறுதியான கருத்துக்களைக் கொண்டிருப்பீர்கள். நீங்கள், தாராள சிந்தை கொண்டிருப்பீர்கள். பிறரால் விரும்பி நேசிக்கப்படுவீர்கள் நண்பர்களும் உறவினர்களும், உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் தருவார்கள். டாம்பீகமான சொகுசு வாழ்க்கையை நீங்கள் வாழ்வதுடன், பதட்டப்படாத அமைதியான சுபாவம் ஒன்றையும் கொண்டிருப்பீர்கள்.

பூராடம்

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், நீங்கள், புத்திசாலியாகவும், கர்வமுடையவராகவும், மற்றவர்களுக்கு உதவியளித்து, நண்பர்களிடம் மிகுந்த ஒட்டுதலாகவும் இருப்பீர்கள். உங்கள் விருப்பத்துக்கு இசைவான மனைவியும் உங்களுக்கு கிடைப்பாள் நீங்கள் உறுதியான கருத்துக்களைக் கொண்டிருப்பீர்கள். குழந்தைகள் மற்றும் நண்பர்கள் முலம் உங்களுக்கு மன மகிழ்ச்சி கிட்டும்.

உத்திராடம்

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், கடமைப்பற்றுடன் கீழ்ப்படிந்தும், நல்ல குணம் படைத்தவராகவும், பல நண்பர்களைக் கொண்டவராகவும் விளங்குவீர்கள். நீங்கள் நன்றியுடையவராகவும், அன்புள்ளம் நிறைந்தவராகவும் இருப்பதுடன், உங்களுக்கு கிடைத்த உதவிக்கு நன்றிக் கடனும் செலுத்துவீர்கள். நீங்கள், மிகுந்த தந்திர புத்தியுடைய சாமர்த்தியசாலியாகவும், முயற்சியில் வெற்றி காண்பவராகவும் விளங்குவீர்கள். உங்களுக்கு பல செல்வந்தர்களைத் தெரிந்திருக்கும் உங்கள் முதலாளிகள் உங்களை மதித்து மதிப்புக் கொடுப்பார்கள். இசையிலும் நடனத்திலும் உங்களுக்கு அபார ஆசை இருக்கும்.

திருவோணம்

நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், நல்ல சுபிட்சத்தோடும், படித்தவராகவும், புத்திசாலியாகவும் விளங்குவீர்கள். இசை, ஜோதிடம், கணிதம் – ஆகியவற்றில் உங்கள் மிகுந்த ஆர்வம் இருக்கும். உங்கள், அதீதமான, நல்ல சக்திவாய்ந்த உள்ளுணர்வு ஒன்று இருக்கும். உங்களுக்கு கவர்ச்சிமிக்க, தாராள மனம் படைத்த மனைவி/கணவன் கிடைப்பார்.

அவிட்டம்

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால் இசையில் ஆழ்ந்த விருப்பம் கொண்டிருப்பீர்கள். தாராள சிந்தையும், செல்வவளமும், நல்ல தீர உணர்வும் கொண்டவராக நீங்கள் விளங்குவீர்கள். பிறர் உங்களை மதித்து மரியாதை, தருவார்கள் உங்கள் கணவன்/மனைவி உங்களை மிகவும் விரும்பி நேசிப்பார். நீங்கள் தைரியமானவராக இருப்பீர்கள் உங்கள் சகோதரர்கள் மற்றும் உறவினர்களை, நீங்கள் மிகவும் விரும்பி அன்பு காட்டுவீர்கள்.

சதயம்

நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், தர்மசிந்தை உடையவராகவும், செல்வவளமும், தாராள மனமும், சுயேச்சையான கருத்தும், புத்திசாலித்தனமும், அறிவாற்றலும் நிறைந்தவராகவும் விளங்குவீர்கள். உங்கள் பகைவர்களை ஒடுக்கி வெற்றி காண்பீர்கள். உங்களைப் பலரும், மதித்து மரியாதை காட்டுவார்கள் உங்களுக்கு நல்ல அந்தஸ்தும் அதிகாரமும் இருக்கும். நீங்கள் எதையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகச் சொல்லிவிடக் கூடியவர் ஆனால் உண்மை பேசுபவர்/ நீங்கள் கஷ்டங்களை அனுபவிப்பீர்கள்.

பூரட்டாதி

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், பணம் சம்பாதிப்பதில் வெற்றி காண்பீர்கள் அதிகமாகப் பேசக்கூடிய நீங்கள், நன்கு படித்தவர் தேர்ச்சிபெற்றவர். நண்பர்களுடன் உங்களுக்கு நல்ல உறவுகள் இருந்து வரும். நீங்கள் தெளிவாகப் பேசுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை, பெரும்பாலும் ஒரு பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்தவராக இருப்பார். நீங்கள், வெகு எளிதில், எதிர்பாலைச் சேர்ந்தவர்களால் ஈக்கப்படுகிறீர்கள். குழந்தைகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவார்கள். உங்களுக்கு, நல்ல, உடல்கட்டு இருக்கும் .

உத்ரட்டாதி

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், ஒரு சிறந்த மேடைப் பேச்சாளராகவும், மகிழ்ச்சி நிறைந்தவராகவும், நற்குணமும், எதிரிகளை ஒடுக்கி வெற்றி கொள்ளும் திறனும் மிக்கவராகவும் விளங்குவீர்கள். நீங்கள், தாராள சிந்தையுடையவராகவும், செல்வவளமும், அறிவாற்றலும் நிறைந்தவராகவும் இருப்பீர்கள். உங்களுக்கு கவர்ச்சிகரமான, வசீகர உடற்கட்டு இருக்கும்.

ரேவதி

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், நல்ல சுபாவம் உடையவராகவும், பணக்காரராகவும், நன்னம்பிக்கையும், அறிவாற்றலும் படைத்தவராகவும், நியாயமான வழிகளில் பணம் சம்பாதிப்பவராகவும் நீங்கள் விளங்குவீர்கள். நீங்கள், வயதில் பெரியவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பணிந்து நடப்பதுடன், மரியாதையும் அளிக்கிறீர்கள்.

 நட்சத்திரங்கள் – கிரகம் – தெய்வம்

1. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் – சூரியன் – சிவன்

2. ரோகிணி, அத்தம், திருவோணம் – சந்திரன் – சக்தி

3. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் – செவ்வாய் – முருகன்

4. திருவாதிரை, சுவாதி, சதையம் – ராகு – காளி, துரக்கை

5. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி – குரு – தட்சிணாமூர்த்தி

6. பூசம், அனுசம், உத்திரட்டாதி – சனி – சாஸ்தா

7. ஆயில்யம், கேட்டை, ரேவதி – புதன் – விஷ்ணு

8. மகம், மூலம், அசுவினி – கேது – வினாயகர்

9. பரணி, பூரம், பூராடம் – சுக்கிரன் – மகாலக்மி

 

உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு?

ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு கோயிலை வழிபட்டதாக சொல்வதுண்டு. அந்தந்த நட்சத்திரக்காரர்கள் தங்கள் தோஷங்களிலிருந்து விடுபட, வழிபட வேண்டிய அதிதேவதை ஒன்றும் உண்டு. உரிய தெய்வத்தை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பதில் ஐயமில்லை. உங்களுடைய நட்சத்திரம் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். அதற்கு ரிய தலத்தை முடிந்தபோது சென்று தரிசித்து வாழ்வில் வளம் பெறுங்கள்.

அஸ்வினி: இந்த நட்சத்திரம் வழிபட்டது திருக்கடையூர் கோயிலாகும். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை சரஸ்வதி.

பரணி: இது வழிபட்ட கோயில் ஸ்ரீவாஞ்சியம். அதிதேவதை துர்க்கை.

கார்த்திகை: இது வழிபட்ட தலங்கள் சரவணப் பொய்கை, காசி, திருவண்ணாமலை ஆகியவை. அதிதேவதை அக்னி.

ரோகிணி: இது திருவானைக்காவலிலும், எல்லா விஷ்ணு கோயில்களிலும் வழிபாடு செய்தது. அதிதேவதை பிரம்மா.

மிருகசீரிஷம்: சிதம்பரம், சிவகங்கை முதலிய தலங்களில் இந்த நட்சத்திரம் வழிபாடு செய்திருக்கிறது. அதிதேவதை சந்திரன்.

திருவாதிரை: எல்லா சிவாலயங்களிலும், குறிப்பாக சிதம்பரத்தில் வழிபாடு செய்தது. அதிதேவதை பரமேஸ்வரன்.

புனர்பூசம்: ராமேஸ்வரத்தில் வழிபட்டது. அதிதேவதை முருகன்.

பூசம்: பொதுவாகவே எல்லா சிவாலயங்களிலும் வழிபட்டது. வியாழன் எனப்படும் பிரகஸ்பதி, அதிதேவதை.

ஆயில்யம்: வழுவூர், மாகாளம் தலங்களில் வழிபட்டது அதிதேவதை ஆதிசேஷன்.

மகம்: பொதுவாகவே எல்லா சக்தி தலங்களிலும் வழிபட்டது. அதிதேவதை சாஸ்தா

பூரம்: எல்லா சக்தி தலங்களிலும் வழிபட்டது. அதிதேவதை பார்வதி.

உத்திரம்: திருவாரூர் தியாகேஸ்வரர், கமலாம்பிகையை வழிபட்டது. அதிதேவதை சாஸ்தா.

அஸ்தம்: திருவாரூர் தியாகேசுவரரை வழிபட்டது. அதிதேவதை சூரியன்.

சித்திரை
: பொதுவாகவே எல்லா சிவாலயங்களிலும் வழிபட்டது. அதிதேவதை விஸ்வதேவர்.

சுவாதி: கேதாரநாதரை வழிபட்டது. அதிதேவதை லட்சுமி.

விசாகம்: பொதுவாகவே எல்லா முருகன் தலங்களில் வழிபட்டது. அதிதேவதை சுப்பிரமணியர்

அனுஷம்: வழிபட்டது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில். அதிதேவதை வாயு.

கேட்டை: இளந்துறை மற்றும் திருநெல்வேலியில் வழிபட்டது. அதிதேவதை தேவேந்திரன்.

மூலம்: மதுரை, வழிபட்ட தலம். அதிதேவதை அசுரன்.

பூராடம்: திருச்செந்தூர், வழிபட்ட தலம். அதிதேவதை வருணன்.

உத்திராடம்: சங்கர நயினார் கோயில், வழிபட்ட தலம். அதிதேவதை விநாயகர்.

திருவோணம்: பொதுவாகவே எல்லா வைணவத் தலங்களிலும் வழிபட்டது. அதிதேவதை மகாவிஷ்ணு.

அவிட்டம், சதயம்: காளஹஸ்தி, ஸ்ரீசைலம், கோகர்ணத்தில் வழிபட்டன. அவிட்டத்திற்கு இந்திரனும், சதயத்திற்கு எமனும் அதிதேவதை.

பூரட்டாதி, உத்திரட்டாதி: திருவாரூர் தேவ தீர்த்தத்தில் நீராடி, தியாகேசரை வழிபட்டன. பூரட்டாதிக்கு குபேரனும், உத்திரட்டாதிக்கு காமதேனுவும் அதிதேவதை.

ரேவதி: திருக்கடையூரில் வழிபட்டது. சனி அதிதேவதை.

 

27 நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தெய்வங்கள்
நட்சத்திரங்கள் -அதிஸ்டம் தரும் தெய்வங்கள்

01. அஸ்வினி – ஸ்ரீ சரஸ்வதி தேவி
02. பரணி – ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
03. கார்த்திகை – ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
04. ரோகிணி – ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)/ பிரம்மா
05. மிருகசீரிடம் – ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)/ சந்திரன்
06. திருவாதிரை – ஸ்ரீ சிவபெருமான்/ பரமசிவன்
07. புனர்பூசம் – ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)/ சக்தி
08. பூசம் – ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)/ குரு
09. ஆயில்யம் – ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)/ ஆதிசேசன்
10. மகம் – ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)/ சுக்கிரன்
11. பூரம் – ஸ்ரீ ஆண்டாள் தேவி/ பார்வதி
12. உத்திரம் – ஸ்ரீ மகாலக்மி தேவி/ சூரியன்
13. அத்தம் – ஸ்ரீ காயத்திரி தேவி/ சாஸ்தா
14. சித்திரை – ஸ்ரீ சக்கரத்தாழ்வார்/ விஸ்வகர்மா
15. சுவாதி – ஸ்ரீ நரசிம்மமூர்த்தி/ வாயுபகவான்
16. விசாகம் – ஸ்ரீ முருகப் பெருமான்/ முருகப் பெருமான்
17. அனுசம் – ஸ்ரீ லக்மி நாரயணர்/ இலக்குமி
18. கேட்டை – ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)/ இந்திரன்
19. மூலம் – ஸ்ரீ ஆஞ்சனேயர்/ அய்யனார்
20. பூராடம் – ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)/ வருணன்
21. உத்திராடம் – ஸ்ரீ வினாயகப் பெருமான்/ கணபதி
22. திருவோணம் – ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)/ விஷ்னு
23. அவிட்டம் – ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்)/ அஷ்டதிக்கு பாலகர்கள்
24. சதயம் – ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)/ எமதர்மராஜன்
25. பூரட்டாதி – ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)/ குபேரன்
26. உத்திரட்டாதி – ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)/ காமதேனு
27. ரேவதி – ஸ்ரீ அரங்கநாதன்/ சனீஸ்வரன்

மேலே குறிப்பிட்டள்ளது ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிஸ்டம் தரக் கூடிய தெய்வங்கள் ஆகும். மேலே தரப்பட்டுள்ள தெய்வங்களின் காயத்திரி மந்திரம், அஸ்டோத்திரம் ஜெபம், அவர்களின் திருக்கோவில் வழிபாடு, அவர்களின் உருவத் தியானம் ஆகியன செய்து வழிபடலாம். இருப்பினும் குல தெய்வ வழிபாடு மிக முக்கியமான வழிபாடாகும். குல தெய்வ வழிபாடிருந்தால் மட்டுமே மற்ற எந்த வழிபாடாயினும் சிறப்பைத் தரும்.
இதனைத் தவிர அவர்அவர்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கிரகமெதுவோ அந்த கிரகத்திற்குரிய அதிதேவதையான தெய்வத்தினையும் வழிபட்டு வாழ்வில் சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம்.

விருட்ச சாஸ்திரம் (Virutcha Shastra)

27 நட்சத்திரத்திற்குரிய மரங்கள், உங்கள் கர்மவினை தீர மரக்கன்று நடுங்கள்

நாம் பிறந்த நட்சத்திரங்களுக்கும், ஒரு சில விருட்சங்களுக்கும் நேரடி தொடர்பு உண்டு.

மனிதனாய் பிறந்த அனைவருக்கும் , ஏதாவது ஒரு வகையில் பிரச்னைகள் இருந்து கொண்டு தான் இருக்கும்.. சிலருக்கு  விஸ்வ ரூபம் எடுக்கும்.. சிலருக்கு, பணம், சிலருக்கு நோய், சிலருக்கு குடும்பம் , ….. இது சகலருக்கும் பொருந்தும்.. பிரச்னை இல்லாதவர்கள் … குழந்தைகள் .. இல்லையேல் ஞானிகள்…

பந்தம், பாசம் அற்று இருக்க வேண்டும்.. இல்லையேல் ஒன்றும் அறியாத குழந்தையாய் இருத்தல் வேண்டும்.  மொத்தத்தில் மனம் நிச்சலனமாய் இருக்க வேண்டும். தன்னை  அறிவதே வாழ்க்கை.  நாம் இந்த பிறவியில் எந்த நோக்கத்திற்காக பிறந்து இருக்கிறோம், அனைத்தும் ஒடுங்கி அந்த பரம்பொருளில் இணைவதே.. முடிவில் வாழ்க்கை என்று தெரிய வரும்.. ஜோதிடம் என்பது அந்த வகையில் ஒரு கருவி நமக்கு. .. நாம் சென்ற பிறவியில் நல்லவனாய் இருந்தோமா.. இந்த பிறவியில் எப்படி இருப்போம்..? நமக்கு எப்போது நேரம் நல்லபடியாக இருக்கும்? எப்போது கடுமையாக இருக்கும்? என்று பல விதங்களில் உங்களுக்கு வழி காட்டும்.

நம்மை அறியாமல் நாம் செய்யும் பாவங்களை, பாவ கதிர்களை கிரகிக்கும் சக்தி விருட்சங்களுக்கு உண்டு..  உங்கள் நட்சத்திரத்துக்குரிய மரத்தை, நீங்களே உங்கள் கையால் நட்டு, நீரூற்றி வளர்த்து வாருங்கள்.. அந்த மரம் வளர, வளர உங்கள் வாழ்வும் வளம் பெறும். உங்கள் பாவக் கதிர்களை கிரகித்து, உங்களுக்கு அற்புதமான ஒரு ஆன்ம தொடர்பை இந்த மரங்கள் செய்யும். சில மரங்களை வீட்டில் வளர்க்க முடியாது.. உங்கள் கண் படும் இடங்களில் , உங்கள் தோட்டத்திலோ, சாலை ஓரங்களிலோ, இல்லை ஆன்மிக ஸ்தலங்களில், ஒரு கோயில்சார்ந்த வனப்பகுதியில் (சதுரகிரி, திருஅண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம், பாபநாசம், குருவாயூர், திருப்பதி, திருத்தணி, சுவாமி மலை) தென்மேற்குப் பகுதியில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் நடவேண்டும். அந்த மரக்கன்றையும் அவரது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிக நன்று.

மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களை ஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு ஊறிய நவதானியங்களையும் அந்த மரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும்.

இப்படிச் செய்த மறு விநாடிமுதல், அம்மரக்கன்று வளர, வளர அதை நட்டவரின் வாழ்க்கை மலரும். அந்த மரக்கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும்.

அம்மரக்கன்று பூத்து, காய்க்கும்போது, உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத்துவங்கும். அவரது கர்மவினைகள் நீங்கியிருக்கும். கர்மவினைகளை வெற்றிகொள்ள ‘விருட்ச சாஸ்திரம்’ இப்படி ஒரு வழிகாட்டுகிறது.

இப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரிய விருட்சம் எனப்படும் மரம் எதுவெனப் பார்ப்போம்:

அஸ்வினி
1 ம் பாதம் – காஞ்சிதை (எட்டி)
2 ம் பாதம் – மகிழம்
3 ம் பாதம் – பாதாம்
4 ம் பாதம் – நண்டாஞ்சு

பரணி
1 ம் பாதம் – அத்தி
2 ம் பாதம் – மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் – விளா
4 ம் பாதம் – நந்தியாவட்டை

கார்த்திகை
1 ம் பாதம் – நெல்லி
2 ம் பாதம் – மணிபுங்கம்
3 ம் பாதம் – வெண் தேக்கு
4 ம் பாதம் – நிரிவேங்கை

ரோஹிணி
1 ம் பாதம் – நாவல்
2 ம் பாதம் – சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் – மந்தாரை
4 ம் பாதம் – நாகலிங்கம்

மிருகஷீரிஷம்
1 ம் பாதம் – கருங்காலி
2 ம் பாதம் – ஆச்சா
3 ம் பாதம் – வேம்பு
4 ம் பாதம் – நீர்க்கடம்பு

திருவாதிரை
1 ம் பாதம் – செங்கருங்காலி
2 ம் பாதம் – வெள்ளை
3 ம் பாதம் – வெள்ளெருக்கு
4 ம் பாதம் – வெள்ளெருக்கு

புனர்பூசம்
1 ம் பாதம் – மூங்கில்
2 ம் பாதம் – மலைவேம்பு
3 ம் பாதம் – அடப்பமரம்
4 ம் பாதம் – நெல்லி

பூசம்
1 ம் பாதம் – அரசு
2 ம் பாதம் – ஆச்சா
3 ம் பாதம் – இருள்
4 ம் பாதம் – நொச்சி

ஆயில்யம்
1 ம் பாதம் – புன்னை
2 ம் பாதம் – முசுக்கட்டை
3 ம் பாதம் – இலந்தை
4 ம் பாதம் – பலா

மகம்
1 ம் பாதம் – ஆலமரம்
2 ம் பாதம் – முத்திலா மரம்
3 ம் பாதம் – இலுப்பை
4 ம் பாதம் – பவளமல்லி

பூரம்
1 ம் பாதம் – பலா
2 ம் பாதம் – வாகை
3 ம் பாதம் – ருத்திராட்சம்
4 ம் பாதம் – பலா

உத்திரம்
1 ம் பாதம் – ஆலசி
2 ம் பாதம் – வாதநாராயணன்
3 ம் பாதம் – எட்டி
4 ம் பாதம் – புங்கமரம்

ஹஸ்தம்
1 ம் பாதம் – ஆத்தி
2 ம் பாதம் – தென்னை
3 ம் பாதம் – ஓதியன்
4 ம் பாதம் – புத்திரசீவி

சித்திரை
1 ம் பாதம் – வில்வம்
2 ம் பாதம் – புரசு
3 ம் பாதம் – கொடுக்காபுளி
4 ம் பாதம் – தங்க அரளி

சுவாதி
1 ம் பாதம் – மருது
2 ம் பாதம் – புளி
3 ம் பாதம் – மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் – கொழுக்கட்டை மந்தாரை

விசாகம்
1 ம் பாதம் – விளா
2 ம் பாதம் – சிம்சுபா
3 ம் பாதம் – பூவன்
4 ம் பாதம் – தூங்குமூஞ்சி

அனுஷம்
1 ம் பாதம் – மகிழம்
2 ம் பாதம் – பூமருது
3 ம் பாதம் – கொங்கு
4 ம் பாதம் – தேக்கு

கேட்டை
1 ம் பாதம் – பலா
2 ம் பாதம் – பூவரசு
3 ம் பாதம் – அரசு
4 ம் பாதம் – வேம்பு

மூலம்
1 ம் பாதம் – மராமரம்
2 ம் பாதம் – பெரு
3 ம் பாதம் – செண்பக மரம்
4 ம் பாதம் – ஆச்சா

பூராடம்
1 ம் பாதம் – வஞ்சி
2 ம் பாதம் – கடற்கொஞ்சி
3 ம் பாதம் – சந்தானம்
4 ம் பாதம் – எலுமிச்சை

உத்திராடம்
1 ம் பாதம் – பலா
2 ம் பாதம் – கடுக்காய்
3 ம் பாதம் – சாரப்பருப்பு
4 ம் பாதம் – தாளை

திருவோணம்
1 ம் பாதம் – வெள்ளெருக்கு
2 ம் பாதம் – கருங்காலி
3 ம் பாதம் – சிறுநாகப்பூ
4 ம் பாதம் – பாக்கு

அவிட்டம்
1 ம் பாதம் – வன்னி
2 ம் பாதம் – கருவேல்
3 ம் பாதம் – சீத்தா
4 ம் பாதம் – ஜாதிக்காய்

சதயம்
1 ம் பாதம் – கடம்பு
2 ம் பாதம் – பரம்பை
3 ம் பாதம் – ராம்சீதா
4 ம் பாதம் – திலகமரம்

பூரட்டாதி
1 ம் பாதம் – தேமா
2 ம் பாதம் – குங்கிலியம்
3 ம் பாதம் – சுந்தரவேம்பு
4 ம் பாதம் – கன்னிமந்தாரை

உத்திரட்டாதி
1 ம் பாதம் – வேம்பு
2 ம் பாதம் – குல்மோகர்
3 ம் பாதம் – சேராங்கொட்டை
4 ம் பாதம் – செம்மரம்

ரேவதி
1 ம் பாதம் – பனை
2 ம் பாதம் – தங்க அரளி
3 ம் பாதம் – செஞ்சந்தனம்
4 ம் பாதம் – மஞ்சபலா

தங்களுக்குரிய  நட்சத்திரங்கள், பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து, வளம் பெறுங்கள்..
சில மரங்கள் – நீங்கள் கேள்விப்படாததாக இருக்கலாம். அருகில் இருக்கும் சித்த மருத்துவரையோ, அல்லது , கூகுள் லெ யோ தேடிப் பாருங்கள்.. இல்லையா, அந்த நட்சத்திரத்துக்கு மற்ற  பாதங்களுக்குரிய – பரிச்சயமான மரங்களை வளர்க்கலாம்.

மரங்களை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஸ்தல விருட்சங்கள் உண்டு. அந்த ஸ்தல விருட்சத்தின் அடியில், அருகில் நீங்கள் அமர்வது , நீங்கள் அந்த ஆலயத்தின் கருவறைக்குள் அமர்வதுக்கு ஒப்பானது. ஆலயத்தை சுற்றி இருக்கும் அருள் அலைகளை ஸ்தல விருட்சம் கிரகித்து வெளியிடுகிறது.

திருவண்ணாமலை சென்றால், அந்த மகிழ மரத்தடியில் சில நிமிடங்கள் அமர்ந்து, உணர்ந்து பாருங்கள்..  உங்கள் ஊரில் அருகில் இருக்கும் ஸ்தலங்களில் விருட்சங்களின் அடியில் அமர்ந்து உணர்ந்து பார்த்துவிட்டு. உங்கள் அனுபவங்களை எழுதுங்கள்.

எந்த ஒரு ஜாதகருக்கும், சில சமயங்களில், கிரக நிலைக்கு ஏற்ப எத்தனையோ பரிகாரங்களை செய்த போதிலும், பலன்கள் உடனடியாக கிடைக்காமல் போனால், நீங்கள் தாராளமாக இந்த விருட்சங்களை பரிந்துரைக்கலாம்.