ஜாதகப்படி குழந்தை பாக்யம் எப்படி?
சுக்கிரன், சிற்றின்பத்தில் நாட்டம் கொள்ளச் செய்பவர். திகட்டாத தாம்பத்யத்தையும் ஈர்ப்பு சக்தியையும் தரக்கூடியவர் ஆண்களின் சுக்கிலத்திற்கும் பெண்களின் சுரோணிதத்திற்கும் இவரே காரண கர்த்தா. ஒரு தம்பதியின் ஜாதகங்களில் இந்த மூன்று கிரகங்கள் நல்ல வலிமையுடன் ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம் பெற்று நல்ல அம்சத்தில் இருந்தால் விரும்பிய புத்திர யோகம் தானாக கூடிவரும்.
- கரு தந்து காத்திடும் திருக்கருகாவூர் (Garbarakshambigai Temple) கர்ப்பரட்சாம்பிகை கோயில், கும்பகோணம்-தஞ்சை சாலையில் பாபநாசம் அருகே உள்ளது. குழந்தை பாக்யதடை, அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுபவர்கள் இத்தலத்து அம்பாளை பிரார்த்தித்து, இங்கு தரப்படும் பசுநெய், விளக்கெண்ணெய் பிரசாதத்தை முறைப்படி அருந்திவர தோஷ நிவர்த்தி ஏற்பட்டு புத்திரயோகம் கிட்டும்.
- கரு வளர்க்கும் கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கும்பகோணம்-திருவாரூர் சாலையில் மருதாநல்லூர் கிராமத்தை அடுத்து உள்ளது. இத்தலத்து அம்மனை பிரார்த்தித்துக் கொள்ள புத்திர பாக்யம் உண்டாகும். இங்கு தரப்படும் மஞ்சள் பிரசாதம் மிகவும் சக்தி வாய்ந்தது.
- ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர நாளில், சென்னையை அடுத்துள்ள திருவாலங்காடு சென்று சிவனை பிரார்த்தித்து, அன்றைய தினம் தாம்பத்ய உறவு கொண்டால் சத்புத்திரயோகம் உண்டாகும்.
- கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் நீடாமங்கலம் பேருந்து நிலையத்திற்கு அருகில் புத்திர பிராப்தி தரும் சந்தானராமன் ஆலயம் உள்ளது. இங்கு ராமபிரான் சந்தான யோகம் தருகிறார். இங்கு ஒவ்வொரு மாதமும் புனர்பூச நட்சத்திர நாளில் விசேஷ அபிஷேகங்கள் நடைபெறும்போது ராமனை வழிபடுவது மிகச் சிறப்பாகும்.
குழந்தை பாக்கியம்

Astrology for fertility
அறிவான குழந்தை பாக்கியம் :
- 5ம் பாவாதிபதி சபக்கிரக தொடர்புடன்-சுப கிரக இராசியில் இருத்தல்.
- 5ம் பாவாதிபதியின் இருபுறமும் சுப கிரகமிருத்தல்.
- 5ம் பாவாதிபதி உச்சமடைந்திருத்தல்.
- குரு – கோணங்களில் இருத்தல்.
- 5ம் அதிபதி சுபர் வீடுகளாகிய ரிஷபம், துலாம், மிதுனம், கன்னி, தனுசு, மீனம், கடகம்,இதில் இருத்தல்.
- புதன் 5 ல் இருத்தல்.
- 5ம் அதிபதி உச்சமடைதல்.
- 5ம் அதிபதி கேந்திரத்தில் இருத்தல்.
- குரு தன் ராசிகளான தனுசு,மீனம் இவைகளில் ஜாதகத்தில் இருந்து,அது போல் நவாம்சத்திலும் தனது சொந்த வீட்டில் இருத்தல்.
பிள்ளைகளால் பெற்றோர் சஞ்சலமடையும் யோகம் :
- 15ம் பாவம் சிம்மராசியாகி அதில் சனி,செவ்வாய் இருத்தல்.
- 5ம் அதிபதி 6ல் இருத்தல்.
- 5ம் பாவம் செவ்வாய் வீடுகளாக அமைந்து அதை செவ்வாய் பார்ப்பது.
- 5ம் பாவம் செவ்வாய் வீடுகளாகிய அமைந்து அதில் ராகு இருந்து செவ்வாய் தொடர்பு ஏற்படுதல்.
- குரு நீச்சமடைவது.
- 5ம் பாவத்தில் சனி இருத்தல்.
- 5ம் பாவத்தில் 3க்கு மேல் பாவ கிரகங்கள் இருத்தல்.
- 5ம் பாவத்தில் குரு இருந்து அதை சுக்கிரன் பார்த்தால்-கூடி இருத்தல்.
- 5ம் பாவம் குருவின் ராசிகளான தனுசு,மீனமாக இருத்தல்.
- குரு இருக்கும் ராசிக்கு 5ல் பாபிகள் இருத்தல்.
தாமத குழந்தை பாக்கியம் :
- லக்ன அதிபதி சுபருடன் சேர்ந்து 6-8-12ல் இருத்தல்.
- 5ம் பாவ அதிபதி சுபருடன் சேர்ந்து 6-8-12ல் இருத்தல்.
- 9ம் பாவ அதிபதி சுபருடன் சேர்ந்து 6-8-12 ல் இருத்தல்.
- அதிக சுப கிரகங்கள் 10ம் பாவத்திலும் அதிக பாப கிரகங்கள் 5ல் இருத்தல்.
- குரு 4 அல்லது 5ல் 8ம் பாவத்தில் சந்திரன் இருப்பது.
- பாப கிரகங்களின் ராசிகள் லக்னமாக அமைவது.
- ஆட்சி பெற்ற சந்திரன் பாப கிரகத்தோடு சேர்தல்-பார்த்தல்-தொடர்பு.
- சூரியன்,சனி சமசப்தமாக இருத்தல்.
- 11ம் பாவத்தில் ராகு இருத்தல்.
- 5ல் குரு,5ம் அதிபதி சுக்கிரனுடன் சேர்தல்-பார்த்தல்-தொடர்பு.
தாய்-தந்தை-குழந்தை ஜாதக ஒற்றுமை :
- தாய் அல்லது தந்தை ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசியிலிருந்து 1-5-7-9ல் குழந்தையின் ஜன்ம லக்னம் அல்லது சந்திரன் இருக்கும்.
- தாய் அல்லது தந்தை ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 1-5-9ல் குழந்தையின் ஜன்ம லக்னமாய் அல்லது சந்திர ராசியாக இருக்கும்.
- தாய் அல்லது தந்தை ஜன்ம லக்னம் குழந்தைக்கு சந்திர ராசியாக இருக்கும்.
- தாய் அல்லது தந்தை சந்திர ராசி குழந்தைக்கு ஜன்ம லக்னமாக இருக்கும்.
- தாய் அல்லது தந்தையாருக்கு சூரியன் இருக்கும் அதே பாவத்தின் குழந்தையின் லக்னம் அல்லது சந்திர ராசியாக இருக்கும்.
ஆண் குழந்தை யோகம் :
- 5ம் பாவம் மேஷம்,ரிஷபம்,கடகமாக இருத்தல்.
- 5ம் அதிபதி,5ம் பாவம்,சுப கிரக தொடர்பு-சேர்க்கை-பார்வை.
- குரு சுபக் கிரக சேர்க்கை-தொடர்பு.
- லக்னாதிபதி 5ல்,5ம் அதிபதி குரு சேர்க்கை-தொடர்பு.
- லக்னாதிபதி 5ம் அதிபதியைப் பார்ப்பது.
- லக்னாதிபதி 5ம் அதிபதி சேர்ந்து கேந்திரங்களில் இருத்தல்.
- லக்னாதிபதி 5ம் அதிபதி 9ம் அதிபதி மூவரின் சேர்க்கை-பார்வை-தொடர்பு.
- லக்னம் அல்லது சந்திரன் இருக்கும் ராசியிலிருந்து 5மிடம் சுப ராசியாகி,அதில் சுபகிரகம் இருத்தல்.
- 5ம் பாவம் ஆண் ராசிகளாக இருத்தல்.
- லக்னாதிபதியும் 5ம் அதிபதியும் பரிவர்த்தனை-வர்க்கோத்தும் அடைதல்.
பெண் குழந்தை யோகம் :
- 5ம் பாவம் பெண் ராசிகளாக அமைவது.
- 5ம் பாவத்தில் சுக்கிரன்-சந்திரன் இருத்தல்.
- 5ம் பாவாதிபதியுடன் சுக்கிரன்-சந்திரன்,தொடர்பு-பார்வை-இணைவு.
- 5ம் பாவாதிபதி 2 அல்லது 8ல் இருத்தல்.
- 11ம் ராசியில் புதன்-சந்திரன்-சுக்கிரன் இருத்தல்.
முதலில் ஆணா? பெண்ணா? யோகம் :
- லக்னாதிபதி லக்னத்தில் அல்லது 2ல் அல்லது 3ல் முதலில் ஆண் குழந்தை.
- உபய ராசியில் சந்திரன்-செவ்வாய்-சுக்கிரன் முதலில் ஆண் குழந்தை.
- 5ம் அதிபதி ஆண் கிரகமாகவும் அது ஆண் ராசிகளில் இருந்தும்,ஆண் ராசி நவாம்சடைந்திருந்தால் முதலில் ஆண்.
- 5ம் அதிபதி பெண் கிரகமாகவும் அது பெண் இராசிகளில் இருந்தும்-பெண் ராசி நவாம்சத்தையும் அடைந்திருந்தால் முதலில் பெண்.
- 5ல் சந்திரன்-சுக்கிரன் இருவரும் சேர்ந்து இருந்தால் முதலில் பெண்.
ஒரு குழந்தையின் ஜாதகம் எப்போது அதன் பெற்றோருக்கு பலன் தரும்?
பொதுவாக கருவில் இருக்கும் போதே (ஏறக்குறைய 100 நாட்களுக்குப் பின்னர்) குழந்தையின் ஜாதகம் பலன்தரத் துவங்கி விடும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
ஆனால் ஒரு சிலர், குழந்தைக்கு 3 வயது முடிந்த பின்னரே ஜாதகம் பார்க்க வேண்டும். அப்போதுதான் அது பலனளிக்கும் எனக் கூறுவது உண்டு. குழந்தை பிறந்த நேரம் சரியில்லாமல் இருந்தால், பெற்றோருக்கும், குழந்தைக்கும் இடையிலான பாசப் பிணைப்பு குறைந்துவிடும் என்பதால் அப்படிக் கூறுகின்றனர்.
ஒரு சில பெற்றோர், கரு உருவாகும் சமயத்தில் சாதாரண நிலையில் இருந்தாலும், குழந்தை பிறக்கும் நேரத்தில் அவர்கள் பொருளாதார ரீதியாக நல்ல நிலைக்கு உயர்ந்து விடுவர். எனக்குத் தெரிந்த ஒருவர் வாடகை வீட்டில் வசித்து வந்தார். வாடகை வீட்டில் இருந்த காலத்தில் அவரது மனைவி கர்ப்பம் தரித்தார்.
பிரசவம் முடிந்து தாயும், சேயும் நலமாக வீடு திரும்பினர். அவர்கள் முன்பு வசித்த வாடகை வீட்டிற்கு அல்ல… புதிதாக அவர்கள் கட்டிய சொந்த வீட்டிற்கு. இதுபோன்ற சிறப்பான யோகங்களையும் ஒரு சில குழந்தைகளின் ஜாதகம் கொடுக்கும். ஆனால் குழந்தை உருவான நேரம் சிறப்பாக இல்லாவிட்டால் மேற்கூறியதற்கு நேர்மாறான பலன்கள் உருவாவதும் உண்டு.
பொதுவாக பெற்றோருக்கு நல்ல தசாபுக்தி, அந்தரம் இருக்கும் காலகட்டத்தில் உருவாகும் குழந்தைகள், மிகப்பெரிய யோகம் உள்ளதாகவும், அறிவாளியாகவும், அதிர்ஷ்டசாலியாகவும் இருக்கும். ஆனால், பெற்றோருக்கு ஜாதகம் சரியில்லாத நேரத்தில் உருவாகும் குழந்தைகள் நோயாளியாகவும், அதிர்ஷ்டமற்றதாகவும் இருக்கும் என நூல்கள் கூறுகின்றன குறைபாடு உள்ள குழந்தைகள் பிறப்பதற்கு பெற்றோரின் ஜாதகமே பெரும்பாலும் காரணமாகி விடுகிறது. குறைப்பிரசவத்தில் குழந்தைகள் பிறக்கவும் இதுவே காரணம்.