உங்கள் ராசியும் உங்கள் குணமும்

நவக்கிரகங்களில் மனோகாரகன் என வர்ணிக்கப்படும் சந்திரபகவான் ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் ஜாதகர் எதிலும் தைரியமாகவும், துடிப்புடனும் செயல்படுவார்;. சந்திரன் ஜெனன ஜாதகத்தில் வலு இழந்தாலும் பாவிகள் சேர்க்கை பெற்று இருந்தாலும் மனோதைரியம் குறைவாக இருக்கும். சந்திரன் பலம் ஒருவர் ஜாதகத்தில் மிகவும் முக்கியமாகும். ஒரு வரது உணர்ச்சி பூர்வமான செயல்களை சந்திரன் நிலை கொண்டு தெரிந்து கொள்ளலாம். வளர்பிறைச் சந்திரன் முழு சுபர் ஆவார். தேய் பிறைச் சந்திரன் பாவி கிரகம் ஆவார். அமாவாசை முதல் பவுர்ணமி வரை வளர்பிறைக் காலமாகும்.

இக்காலத்தில் சந்திரன் சுபகிரகமா கவும், சற்று பலம் பெற்ற கிரகமாகவும் இருக்கும். பௌர்ணமி முதல் அமாவாசை வரை உள்ள காலம் தேய்பிறை யாகும். இக்காலத்தில் சந்திரன் சற்று பலம் இழந்து இருப்பார். ஜெனன ராசி சக்கரத்தைக் கொண்டு ஜாதகர் வளர் பிறையில் பிறந்தாரா அல்லது தேய்பிறையில் பிறந்தாரா என்று மிகத் தெளிவாக எளிதில் தெரிந்து கொள்ளலாம். எப்படி என்றால் சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 7-ம் வீட்டிற்கு சந்திரன் இருந்தால் வளர்பிறையில் பிறந்தவராவார். சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 7-ம் வீடு முதல் 12-ம் வீடு வரை சந்திரன் இருந்தால் தேய்பிறையில் பிறந்தவராவார். சந்திரன் சஞ்சரிக்கும் ராசியே ஜென்ம ராசி ஆகும். ஜென்ம ராசியைக் கொண்டே கோட்சார பலனை நிர்ணயம் செய்கிறோம். பிறக்கும் நேரத்தில் சந்திரன் ஒரு நட்சத்திரத்தில் சென்ற நேரமே ஜெனன கால திசை சென்றது ஆகும். சந்திரன் சஞ்சாரத்தில் மீதி உள்ள நேரம் ஜெனன கால திசை இருப்பு, காலமாகும்.

அசுவினி, மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தால் முதலில் கேது திசை தொடங்கும்.

பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தால் முதலில் சுக்கிர திசை தொடங்கும்.

கிருத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தால் முதலில் சூரிய திசை தொடங்கும்.

ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தால் முதலில் சந்திர திசை தொடங்கும்.

மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தால் செவ்வாய் திசை முதலில் தொடங்கும்.

திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத் திரத்தில் பிறந்தால் முதலில் ராகு திசை தொடங்கும்.

புனர் பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தால் குரு திசை முதலில் தொடங்கும்.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தால் சனி திசை
முதலில் தொடங்கும்.

ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தால் முதலில் புதன் திசை தொடங்கும்.

 

12 ராசிகளில் பிறந்தவர்களின் தன்மைகள்

மேஷம்

ஜென்ம ராசியாதிபதி செவ்வாய் ஆவார். தைரியம், துணிவு, முரட்டுத்தனமான நடவடிக்கை, வலிமை மிகுந்த உடலமைப்பு, எளிதில் உணர்ச்சி வசப்படும் தன்மை, கூட்டாளிகளை உயர்த்தும் தன்மை, பலரை நிர்வகிக்கும் திறன், மிகதைரியசாலியாக மற்றவர்களை காப்பாற்றும் திறன் கொண்டவராக விளங்குவார்கள்.

ரிஷபம்

சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட இவர்கள் அழகானவர்கள். கோதுமை போன்ற நிறமும், தரமான உயரமும், கருப்பான கண்களும் நன்றாக வளர்ந்த தலைமுடியும், கற்பனை வளம் கொண்டு பேச்சுத் திறனால் மற்றவர்களை கவர்ச்சி செய்யும் திறன் கொண்டவராகவும், மென்மையான உணர்ச்சியும், கலை, சினிமா, ஆடை, ஆபரணத்தில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மிதுனம்

புதன் ஆதிக்கம் கொண்ட இவர்கள் சிறந்த அறிவாளியாகவும், உயரமான உடலமைப்பு, எளிதில் உணர்ச்சிக்கு உட்பட்டவராகவும், வேடிக்கை செய்பவரும், வணிகத்துறையில் நாட்டம் கொண்டவராகவும், அடிக் கடிமனம் மாறும் தன்மை கொண்டவராகவும் இருப்பார்கள்.

கடகம்

ஜென்ம ராசியாதிபதி சந்திரன் ஆவார். மனோதைரியம் மிக்கவ ராகவும், தரமான உயரமும், வெண்மை நிறமும், இரக்க குணமும் வீட்டை நேசிப்பவராகவும் இருப்பார்கள். மிக புத்திசாலியாகவும், உடல் அழகும் கொண்டவராக இருப்பார்கள். பெண் என்றால் கவர்ச்சி மிகுந்த உடலமைப்பு, இனிய குரல், சேமிக்கும் மனப்பான்மை கொண்டவராக இருப்பார்கள்.

சிம்மம்

ராசியாதிபதி சூரியன் ஆவார். இயற்கையாகவே எதிலும் மிகத் துணிச்சலுடன் தொலைநோக்கு பார்வையும், லட்சியம் பல உடையவராகவும், கௌரவமான தோற்றமும், வெளிபார்வைக்கு மாற்றங்களை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்போல இருந்தாலும் அப்படி இருக்க மாட்டார்கள். எதிலும் சூழ்நிலைக்குத் தக்கவாறு நடந்துகொள்ள தெரிந்தவர்களாக இருப்பார்கள்.

கன்னி

ஜென்ம ராசியாதிபதி புதன் பகவான் ஆவார். தரமான உடலமைப்பு உணர்ச்சி மிக்கவராகவும், புத்திசாலியாகவும், காதல் கற்பனை கொள்பவரா கவும், இசையிலும் பல நுண்ணிய கலைகளிலும் நாட்டம் கொண்டவராகவும், மற்றவர்களை எளிதில் நட்பு கொள்ளாத வராகவும் இருப்பார்கள்.

துலாம்

சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட இவர்கள் அழகான தோற்றம், கற்பனை வளம் மிக்கவராகவும், நல்ல உடலமைப்பும், அன்புள்ளவராகவும், எந்த சூழ்நிலையிலும் சாயாத தன்மை கொண்டவராகவும், கலை, இசை, சினிமாவில் நாட்டம் கொண்டவராகவும் இருப் பார்கள்.

விருச்சிகம்

செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட இவர்கள் உயர்ந்த பண்பு உடையவராகவும், இளமையானவராகவும், உணர்ச்சி வசப்படும் தன்மையும், பயந்த சுபாவம் கொண்டவராகவும், மனக்குழப்பம் அதிகம் கொண்டவரா கவும், ரகசிய உடல் பாதிப்பு உடைய வராகவும் இருப்பார்கள்.

தனுசு

குருவின் ஆதிக்கம் கொண்ட இவர்கள் பயந்த சுபாவம் கொண்டு இருந்தாலும்; நினைத்த காரியத்தை முடிப்பதில் பிடிவாதம் கொண்டவராகவும், அறிவு திறன் மிக்கவராகவும், மற்றவர்களை எளிதில் நம்பும் தன்மை கொண்டவராகவும், கடவுள் பயம் மிக்கவராகவும் இருப்பார்கள்.

மகரம்

சனியின் ஆதிக்கம் கொண்ட இவர்கள் உயரமான உடலமைப்பு, மாநிறம், உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம், திறமை மிக்கவர். நல்ல நடவடிக்கை கொண்டவராகவும், கடவுள் பயம் கொண்டவராகவும், வாழ்வில் அடி மட்டத்திலிருந்து உயர்ந்த இடத்திற்கு வந்த வர்களாக இருப்பார்கள்.

கும்பம்

ஜென்ம ராசி யாதிபதி சனி பகவான் ஆவார். படித்தவர், புத்திசாலி, சீக்கிரம் கோபம் வரும் தன்மை கொண்டவர்கள். கற்பனை வளம் மிக்கவர். மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர் பல்வேறு தடைகளை சந்திப்பவர்.

மீனம்

குருபகவானின் ஆதிக்கம் கொண்ட இவர்கள் நல்லநிறமும், திடமான உடலமைப்பும், மிக ஜாக்கிரதையாக செயல்படும் திறனும் கொண்டு கடவுள் பயம்மிக்கவராக இருப்பார்கள்.