12 ராசிகளுக்கும் சனி தோஷ பரிகாரம்

பரிகாரங்கள் பலவிதம். சனி பகவான் ஸ்தோத்திரப் பிரியவர். சனி பகவான் சூரிய புத்திரர் என்றும் சிவபூஜை செய்பவர் என்னும் புராணங்கள் கூறுகின்றன. எனவே தினசரி நியம நிஷ்டையும் தனது இஷ்ட தெய்வம் (அ) சிவபூஜையும் செய்பவரை சனி அவ்வளவு பாதிப்பது இல்லை என்பது முன்னோர் அனுபவம்.

பூஜை, ஜெபம் மூலம் சனீஸ்வர பகவானை தியானிப்பது ஒருவகை சாந்தி பரிகாரம். சனி பகவானுக்குரிய திவ்ய சேத்திரங்களில் நீராடி தக்க தான திருமங்களை செய்வது ஒரு வகை சாந்தி பரிகாரம். இவை இரண்டும் இயலாதவர்கள் தாம் இருக்கும் இடத்திலேயே உள்ள சனீஸ்வர பகவானை மனமுருகி வழிபட்டு (தினசரி காக்கைக்கு அன்னமிடுவதுடன்) எள் தீபம் ஏற்றி வருவது ஒருவகை சாந்தி பரிகாரம் ஆகும்.

கீழே 12 ராசிகளுக்கும் ஏற்ற பரிகாரங்கள் தரப்பட்டுள்ளன. யாருக்கு எது முடியுமோ அதனை உறுதி வாய்ந்த மனதுடன் செய்தால் சனியினால் வரும் பல வினைகள் கதிர்முகம் கண்ட பனி போல் அகலும்.

மேஷம்

1. சனி பகவான் காயத்ரி மந்திரத்தை தினசரி 108 முறை ஜபித்து வாருங்கள். 2. காக்கைக்கு அன்னமிடுவது நல்லது.
3. வசதியுள்ளவர்கள் சுதர்சன ஹோமம் செய்யலாம்.
4. மஞ்சள் வஸ்திரம் சாத்தி தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரலாம்.
5. சிவ பாராயணம், பிரதோஷ வழிபாடு நலம் தரும்.
6. விநாயகருக்கு சனி தோறும் அருகம் புல்லில் அர்ச்சனை செய்து வழிபடலாம். கணபதி ஹோமம் செய்தலும் நன்றே விளையும்.

ரிஷபம்

1. `காகத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்தப் ப்ரசோதயாத்’

2. ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு செய்ய நன்று.
3. சனிக்கிழமைதோறும் பிரசித்தி பெற்ற அருகிலுள்ள தேவாலயத்தில் நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடலாம்.
4. உடல் ஊனமுற்றவர்களுக்கு இயன்ற அளவு தான, தர்மம் செய்து வரலாம்.

மிதுனம்

1. உடல் ஊனமுற்றவர்களுக்கு ஆடை தானம், அன்னதானம், குடை தானம், கைத்தடி தானம் என தான தர்மங்கள் செய்துவர சனிதோஷம் விலகி ஆயுள் வளரும். நோய் நொடிகள் தீரும்.
2. கோளாறு பதிகம் பாராயணம் செய்ய நன்று.
3. சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம் புல் மாலை சாத்தி வழிபடலாம்.
4. மாரியம்மன், காளியம்மன் ஆலயம் சென்று நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபட நலம் விளையும்.
5. கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம்.

கடகம்

1. பிரதி வியாழன் தோறும் தட்சிணாமூர்த்தியை கொண்டக்கடலையை தாம்பூல தட்சணையுடன் சமர்ப்பித்து வழிபடலாம்.
2. ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு செய்து வரலாம்.
3. உடல் ஊனமுற்றவர்களுக்கு எள்ளு, கொள்ளு தானம் செய்ய நன்று.
4. மஹாலட்சுமி அஷ்டோத்திரம் பாராயணம் செய்து இனிப்பு, நைவேத்தியம் சமர்ப்பிக்க நன்று.
5. ஏழை, எளியவர்களுக்கு இயன்ற அளவு தான தர்மங்கள் செய்து வரலாம்.

சிம்மம்

1. சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு நீலோற்பவ மலரால் அர்ச்சிக்க நலம் பல விளையும்.
2. எள் முடிச்சு தீபம் ஏற்றலாம்.
3. சிவநாமம், பாராயணம் செய்யலாம்.
4. கணபதி ஹோமம், செய்யலாம் (அல்லது) சுதர்சன ஹோமம் செய்து அன்னதானம் செய்ய நன்று.
5. ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு, நெய் தீபம் ஏற்றி வழிபட நலம் விளையும். வம்பு வழக்குகள் சாதகமான நிலைக்குத் திரும்பும்.
6. ஊனமுற்றவர்கள், ஏழை எளியோர்களுக்கு இயன்ற அளவு தானதர்மங்கள் செய்திட சனிதோஷம் விலகும்.

கன்னி

1. சனிக்கிழமை தோறும் அருகிலுள்ள பிரசித்தி பெற்ற தேவாலயம் சென்று நெய்தீபம் போட்டு வழிபட சனிதோஷம் விலகும்.
2. ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடை மாலை, வெண்ணை சாத்தி வழிபடலாம்.
3. ஊனமுற்றவர்களுக்கு (அல்லது) விதவைப் பெண்களுக்கு ஆடை தானம் அளிக்கலாம்.
4. காக்கைக்கு தினசரி அன்னமிட்ட பிறகு உணவு உண்ண நலம் உண்டாகும். 5. சனிபகவான் காயத்ரீயை 108 முறை தினசரி ஜபித்து வரலாம். உடல் நலம் பெறும். தேகம் பலம் பெறும். செய்தொழில் வியாபாரம் விருத்தியாகும்.

துலாம்

1. தினசரி காக்கைக்கு அன்னமிட நலம் உண்டாகும்.
2. திருப்பதி (அல்லது) ஸ்ரீரங்கம் சென்று பகவானை வழிபட்டு வரலாம்.
3. சனிக்கிழமை தோறும் `எள்சாதம்’ நவகிரக சன்னதியில் விநியோகம் செய்யலாம்.
4. சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகருக்கு அருகம் புல் சாத்தி வழிபடலாம்.
5. சாதுக்கள், சன்னியாசி களுக்கு இயன்ற அளவு தான தர்மங்கள் செய்து வரலாம். நலம் உண்டாகும்.

விருச்சிகம்

1. பிரதி ஞாயிறு தோறும் துர்க்கைக்கு ராகு காலத்தில் குங்கும அர்ச்சனை செய்து, எலுமிச்சம் பழ மாலை கட்டி வழிபட்டு வர சகல நலமும் உண்டாகும்.
2. சிவபுராணம், லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்ய அற்புத பலன்கள் கிட்டும்.
3. ஏழை எளியோருக்கு இயன்ற அளவு தான தர்மங்கள் செய்ய நல்லதே நடக்கும்.
4. தினசரி காக்கைக்கு அன்னமிடலாம்.
5. பெருமாள் வழிபாடு நலம் தரும். காரியங்கள் வெற்றியாகும்.

தனுசு

1. சனி தோறும் நீலோற்பவ மலரால் சனி பகவானை அர்ச்சித்து வர பொன், பொருள் சேரும். திருமணத் தடை விலகும்.
2. வன்னி மரத்தடி விநாயகரை வழிபடலாம். (அல்லது) வன்னிமர இலைகளால் விநாயகரை அர்ச்சிக்கலாம்.
3. தீர்த்த யாத்திரை சென்று வரலாம். சிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு நலம் தரும். விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்து வரலாம்.
4. தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற ஆடை சார்த்தி வழிபட்டு வரலாம்.
5. தினசரி சூரிய வழிபாடு செய்து வர சகல நன்மையும் உண்டாகும்.

மகரம்

1. நவக்கிரக சன்னதியை அடைந்து, அங்கு சனி காயத்ரீயை 11 முறை சொல்லி வழிபட்டு வர நலம் உண்டாகும்.
2. சுதர்சன ஹோமம் செய்ய நன்று.
3. விஷ்ணு சகஸ்ர நாமம், லலிதா சகஸ்ர நாமம் பாராயணம் செய்து வரலாம்.
4. வெள்ளெருக்கு விநாயகர் வைத்து வழிபட நலம் பல விளையும். (வடக்கு முகமாக விநாயகரை வைத்து வழிபட வேண்டும்)
5. ஸ்ரீருத்ரம் ஜபிக்கலாம்.

கும்பம்

1.`ஓம் திரயம்பகம் யஜாமமஹே
சுகந்திம் புஷ்டி வர்த்தனம்
உர்வாருக மிவ பந்தனான்
மிருத்யோர் முக்ஷீயமாம் அம்ருதாத்’
என தினசரி 12 முறை சொல்லி வர நலம் உண்டாகும். சனிதோஷம் விலகும். வாழ்வில் சுபிட்சம் நிலவும்.
2. சனிக்கிழமைதோறும் காக்கைக்கு அன்னமிட நன்று.
3. ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு செய்ய நன்று.
4. கருப்பு நிறம் (அல்லது) நீலநிற வஸ்திரம் உடல் ஊனமுற்றவர்கள் (அல்லது) சாதுக்கள், சன்னியா சிகளுக்கு அளித்து வர நலம் உண்டாகும்.

மீனம்

1. கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம்.
2. முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகத்திற்கு கொடுத்து வரலாம்.
3. துவரை தானம் கொடுக்கலாம்.
4. சிவப்பு வஸ்திர தானம் செய்யலாம்.
5. மாரியம்மன், காளியம்மன், பிரத்யங்கிராதேவி, துர்க்கா தேவியை வணங்கி வரலாம். சகல நன்மையும் உண்டாகும்.
6. ஸ்ரீருத்ரம் ஜபிக்கலாம்.
7. விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபடலாம்.
8. தங்க விமானம் மூலஸ் தானமாக உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களை வழிபட்டு வரலாம்