பஞ்சபட்சி சாஸ்திரம் என்றால் என்ன?


14 நாட்களுக்கு ஒருமுறை அமாவாசை அல்லது பவுர்ணமி வருகிறது.இந்த இருநாட்களிலும் சூரியனும் சந்திரனும் முழுவலிமையடைகின்றன. இந்து ஜோதிடப்படி சூரியன் ஆத்மாக்காரகன் எனவும் சந்திரன் மனக்காரகன் எனவும் அழைக்கப்படுகிறது.

பூமியில் பிறக்கும் மனிதன் 14 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் பிறக்கிறான். அது வளர்பிறை பிரதமை என வைத்துக்கொள்வோம். அவனது பிறந்த நட்சத்திரம் அசுவினி என வைத்துக்கொள்வோம். அவனது அசுவினி வளர்பிறையில் வருவதால் பஞ்சபட்சி சாஸ்திரப்படி அவனது பட்சி ஆந்தை வருகிறது.
ஆந்தையின் குணம் என்ன?
அது இரவில் மட்டுமே வெளிவரும்.ஆக, அந்த மனிதனுக்கு பட்டம்,பதவி எல்லாமே இரவில்தான் கிடைக்கும். தனது பட்சி ஆந்தை என அவன் அறிந்தால், அவன் ஒருவரிடம் உதவி கேட்டுச்செல்ல வேண்டிய நேரம் இரவு மட்டுமே! பகலில் அவன் உதவி கேட்டால் அந்த உதவி கிடைக்காது.
அவனுக்குஒரு மாதத்தில் (தமிழ்மாதத்தில்) வளர்பிறைகாலமான 14 நாட்களில் காரியங்கள் வெற்றியடையும். அந்த 14 நாளில் ஒரு குறிப்பிட்ட நாள் மட்டும் அவனது பறவை(பட்சி)யான ஆந்தைக்கு மரணபட்சிநாளாக அமைகிறது. அந்த நாளில் அவன் செய்யும் எந்த சுபகாரியமும் படுதோல்வியடையும். மீதி 13 நாட்களில் ஒவ்வொரு நாளிலும் சுமார் 1 1/2 மணி நேரம் அரசபட்சி நேரமாகிறது. அந்த நேரத்தில் அவன் ஒரு சர்வாதிகாரியை சந்தித்தாலும் காரிய வெற்றி உண்டாகிறது.
பஞ்சம் – வறுமை நீக்கும் பஞ்சாட்சி சாஸ்திரம்
பஞ்ச பூதங்கள் இந்த உலகத்தை இயக்குகின்றன. பஞ்சபூதங்கள் இறையருளால் இயங்குகின்றன. உலகில் காணப்படுகின்ற ஒவ்வொரு பொருளும், பஞ்சபூதத்தால் அல்லது பஞ்ச பூதத்தின் ஒரு கூறினால் ஆனவையே. உருவாயும், அருவமாயும் பஞ்சபூதமுள்ளது. நிலம், நீர் தீ, காற்று, வெட்டவெளி புறமாகிய அண்டத்தில் இருப்பது போல் பிண்டமாகிய நமது உடலாகவும், உடலுக்குள்ளும் உள்ளது. முன்வினைச் செயல்களால் ஏற்படும் விளைவுகளோ அல்லது சாபம், பாபம், தோணம் இவற்றால் ஏற்படும் சரிவுகளோ, வாழ்க்கை துன்பங்களோ பங்சபூதங்களினால் அல்லது பஞ்சபூத ரூபத்தினால் நம்மைத் தாக்கி துன்புறுத்துகின்றன. பஞ்சபூத இயக்க அசைவுகளை அல்லத அதன் விளைவுகளை நமக்கு சாதகமாக மாற்றிவிட்டால் வாழ்வில் எல்லா நலன்களையும் பெறலாம்.
இப்படி பஞ்ச பூத இயக்கத்தை செயல்பாட்டை நமக்கு சாதகமாக, சுலபமாக மாற்றிட, மனுபவித்தில் வெற்றிபெற, செல்வம் பெருபிட சித்தர்கள் நமக்கு வழங்கிய அற்புதக்கலையே பஞ்சபட்சி சாஸ்திரம்.
பஞ்சபட்சி

 பஞ்சபட்சி சாஸ்திர குறியீடாக ஐந்து பறவைகளை வைத்தார்கள். உருவகித்தார்கள். அவையே

1. வல்லாறு
2. ஆந்தை
3. காகம்.
4. கோழி
5. மயில்
பஞ்சபட்சி சாஸ்திரத்தில் எல்லா செயல்களையும் நமக்கு சாதகமாக்க, அஷ்ட கர்மச் செயல்களும் செய்ய வழிவகை இருந்த போதும் செல்வம், பெருக, பஞ்சம், வறுமை நீங்கிட உள்ள வழியை இங்கு பார்ப்போம்.
பஞ்சபட்சி பார்க்கும் விதம்

நீங்கள் அமாவாசை தொடங்கி, பௌர்ணமிக்கு பிறந்தவரா? அப்படியென்றால் உங்களது பட்சி எது என்று பார்க்கும் முறை இதோ.

ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள