சில குடும்பங்களில் செல்வம் இருந்தாலும் மகிழ்ச்சி இருக்காது. சில குடும்பத்தினர் குடிசையில் வாழ்ந்தாலும் மகிழ்ச்சியாக இருப்பர்? இது ஏன்?

ஒருவருக்கு லக்னாதிபதி, பாக்கியாதிபதி, தனாதிபதி ஆகியோர் நன்றாக இருந்தால் அவருக்கு செல்வச் செழிப்பான வாழ்க்கை கிடைக்கும். அதே தருணத்தில் லக்னாதிபதியை விட, 6ஆம் அதிபதி வலுவாக இருந்தால் சொத்து இருக்கும் அளவுக்கு, அவருக்கு கடன் இருக்கிறது என்று கூற வேண்டிய நிலை ஏற்படும்.சிலருக்கு 3 கோடி சொத்து இருந்தால் 4 கோடி வரை கடன் இருக்கும். அவரது குடும்பத்தில் அனைவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கும் போதே சண்டை, சச்சரவுகள் ஏற்படும். வீட்டில் ஒரு நல்ல காரியம் நடந்தால் அடுத்த ஓரிரு நாளில் ஏதாவது கெட்டது நடக்கும்.

லக்னாதிபதியை விட 6ஆம் அதிபதி வலுவாக இருந்தால் சம்பந்தப்பட்டவருக்கு நல்லதும், கெட்டதும், புகழும், இகழ்ச்சியும் கலந்து வரும்.

இதேபோல் வாஸ்துக் குறைபாடு உள்ள வீடுகளிலும் இந்த சூழ்நிலை காணப்படும். ஈசானிய மூலையில் திறப்பு இல்லாமல் இருப்பது. நைருதி பகுதியில் திறப்பு அதிகமாக இருந்தாலும் பாதிப்பு ஏற்படும்.

பரிகாரம்: மேற்கூறிய பாதிப்பு உடையவர்கள் தங்கள் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்பிற்கு ஏற்ற கோயில்களில் பரிகாரங்கள் மேற்கொள்வதுடன், வாஸ்து குறைபாடு உள்ள வீடுகளை மாற்றியமைத்துக் கொள்வது பலன் தரும்.