பெண்ணின் குண அமைப்பு

ஒருவரின் ஜாதக ரீதியாக அவரின் குணநலன்களை பற்றி அறிய அவரின் ஜென்ம லக்னம் உதவியாக அமைகிறது. பொதுவாக, பெண் என்பவள் நல்ல குணநலன்களுடனும், மற்றவர்களை அனுசரித்து, அரவணைத்துச் செல்லுபவளாகவும், இறைபக்தி உள்ளவளாகவும் இருந்தால், அவளின் குடும்பமும் செல்வச் செழிப்புடன், லட்சுமி கடாட்சமாக அமையும்.
இப்படி நற்குணங்கள் யாருக்கு அமையும் என பார்க்கும்போது ஜென்ம லக்னத்தில் சுபக்கிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைசந்திரன் போன்ற கிரகங்கள் அமையப் பெற்றாலும், சுபக்கிரகங்கள் ஜென்ம லக்னத்தை பார்வை செய்தாலும் நல்ல அறிவாற்றல், அழகான உடலமைப்பு, சிறந்த குண நலன்கள் போன்ற யாவும் சிறப்பாக அமையும்.
அதுவே பாவக்கிரகங்ள் லக்னாதிபதியாக இருக்கும் பட்சத்தில் பலம் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் கோபக்காரியாக இருந்தாலும் நல்ல குணவதியாக இருப்பாள். சனி, ராகு போன்ற பாவக் கிரகங்கள் லக்னத்தில் பகை பெற்று அமையப் பெற்றாலும் ஜென்ம லக்னத்தை பார்வை செய்தாலும் மிகுந்த கோபக்காரியாகவும், மற்றவர்களை அனுசரிக்கத் தெரியாதவளாகவும், அழகிற்குறைந்தவளாகவும் இருப்பாள்.

ஜென்ம லக்னமும் பெண்ணின் குண அமைப்பும்

ஜென்ம லக்னமும் பெண்ணின் குண அமைப்பும்
ஒரு நல்ல குணவதியான பெண் என்பவள் அன்பு, பண்பு, பாசம் போன்ற நற்குணங்களைப் பெற்றவளாக இருந்து, தன் குடும்பத்தை நல்ல வழியில்  நடத்திச் செல்கிறாள். இதனால் பிறந்த இடத்திற்கும் புகுந்த இடத்திற்கும் பெருமை சேர்க்கிறாள். தன்னால் இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்து, அனைவரிடமும் நல்ல பெயரையும் பெற்றுக் கொள்கிறாள். அவளுக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகளும் நற்பண்புகள்  நிறைந்தவர்களாகவும், பெரியோர்களை மதித்து நடக்கும் பண்புள்ளவர்களாகவும் வளர்கிறார்கள்.
ஒரு பெண்ணின் நற்குணம் ஒரு குடும்பத்தையே உயர்த்தும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. பொருமை, ஈகை குணம், சகிப்புத் தன்மை போன்ற யாவும் நிறைந்த பெண் சமுதாயத்தில் உன்னதமான உயர்வை அடைவாள். இப்படி உன்னதமான நற்பண்புகளைக் கொண்ட பெண்ணால் நாட்டிற்கும் வீட்டிற்கும் நற்பலன்கள் உண்டாகும். ஜோதிட ரீதியாக பார்க்கும்போது ஒவ்வொரு லக்னத்தில் பிறந்த பெண்ணிற்கும்  ஒவ்வொரு குணநலன்கள் உண்டு.
மேஷ லக்னத்தில் பிறந்த பெண், எல்லாவகையிலும் முதன்மையானவளாகவும், அழகான உடலமைப்பைக் கொண்டவளாகவும், செல்வம் செல்வாக்குடன் வாழக்கூடிய யோகம் பெற்றவளாகவும், மற்றவர்களிடம் விட்டு கொடுத்து நடப்பவளாகவும் உற்றார் உறவினர்களிடையே  பாசம் அதிகம் உடையவளாகவும் இருப்பாள். புத்திர வழியில் சில மன சங்சலங்களை அடைவாள்.
ரிஷப லக்னத்தில் பிறந்த பெண் நல்ல புத்திசாலியாகவும், நல்ல குணவதியாகவும், கல்வி கேள்விகளில் சிறந்தவளாகவும், கலை, இசை போன்றவற்றில் ஆர்வம் உடையவளாகவும், கணவருக்கு கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருப்பாள். சிறந்த புத்திர பாக்கியம், ஆடை, ஆபரண சேர்க்கையும், கவர்ச்சியான உடலமைப்பையும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்வாள்.
மிதுன லக்னத்தில் பிறந்த பெண் சுகபோக வாழ்வில் அதிக நாட்டம் உடையவளாக இருப்பாள். முன்கோபியாகவும், கடினமாக வார்த்தைகளைப் பேசி மற்றவர்களின் மனதை புண்படுத்துபவளாகவும் இருப்பாள். பெண் புத்திர பாக்கிய யோகம் உண்டாகும். மத்திம வயதில் கணவருக்கு கண்டத்தை உண்டாக்கும். வாழ்க்கை ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.
கடக லக்னத்தில் பிறந்த பெண்கள் நல்ல பேச்சாற்றலும் உற்றார் உறவினர்களிடம் அன்பாக  பழகக்கூடிய குணமும், கவர்ச்சியான உடலமைப்பும் கொண்டவளாக இருப்பாள். ஆடை, ஆபரண சேர்க்கை யோடு சீறும் சிறப்பாக வாழ்வாள்.
சிம்ம லக்னத்தில் பிறந்த பெண்களுக்கு முன்கோபம் சற்று அதிகமாக இருக்கும். குடும்பத்தினரிடம்  ஒத்துப்போவதில் சில சங்கடங்கள் உண்டாகும். நல்ல புத்திசாலியாகவும், மற்றவர்களிடம் விசுவாசமாகவும் இருப்பாள். எதிலும் தனித்து நின்ற போராடி வெற்றி பெறுவாள். கணவருக்கு கண்டத்தை ஏற்படுத்தினாலும் வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும்.
கன்னி லக்னத்தில் பிறந்த பெண்களுக்கு மற்றவர்களுக்கு அடங்கி நடக்கும் சுபாவம் இருக்கும்.மகிழ்ச்சியான வாழ்க்கையும், செல்வம், செல்வாக்கும், ஆடை, ஆபரண சேர்க்கையும் இருக்கும். சிறந்த செல்வந்தரை மணக்கக்கூடிய யோகம் உண்டாகும்.  கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவாள். நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல் உண்டாகும்.
துலா லக்னத்தில் பிறந்த பெண்களுக்கு கலை, இசை போன்றவற்றில் ஆர்வம்  அதிகம் இருக்கும். பல கலைகளை கற்றுத் தேர்வாள். பேச்சில் கடுமை இருக்கும் கணவருக்கு அடங்காத குணம், சோம்பேறித்தனம் போன்ற யாவும் இருக்கும். புத்திரர்களால் மனச்சஞ்சலம் அடைவாள்.
விருச்சிகலக்னத்தில் பிறந்த பெண்கள் பிறரை குற்றம் குறை கூறுபவர்களாக ருப்பார்கள் தடித்த உருவமும் யாருக்கும் அடங்காத குணமும் இருக்கும். குடும்ப வாழ்க்கையும் அவ்வளவு சிறப்பாக இருக்காது.
தனுசு லக்னத்தில் பிறந்த பெண்கள் அழகான உடலமைப்பும், கவர்ச்சியான தோற்றமும், கணவருக்கு கட்டுப்பட்டு நடக்கும் பண்பும், நல்ல புத்திசாலியாகவும் திகழ்வாள். குடும்பத்தை நல்ல வழியில் நடத்தி செல்லும் பண்பும் இருக்கும்.
மகர லக்னத்தில் பிறந்த பெண்கள் நல்ல புத்திர பாக்கியம் பெற்று எதிரிகள் இல்லாத சுகமான வாழ்வை வாழ்வார்கள். பல புனித ஸ்தலங்களை தரிசிக்கும் பாக்கியம் கிட்டும். உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். வாழ்வின் கடைசி காலத்தில் சுமங்கலியாக மரிப்பாள்.
கும்ப லக்னத்தில் பிறந்த பெண்கள் செல்வசெழிப்புடன் பிறந்தாலும் வறுமை நிலையிலேயே வாழ்வாள். உடல் ஆரோக்கியத்திலும் தேவையற்ற பாதிப்புகள் ஏற்படும். குடும்ப வாழ்க்கை அவ்வளவு திருப்தியாக அமையாது.
மீன லக்னத்தில் பிறந்த பெண்கள் உற்றார், உறவினர்களை மதிக்கும் சுபாவமும், பெரியவர்களிடம் மரியாதை கொண்டவளாகவும் இருப்பாள். ஆடை, ஆபரண சேர்க்கையும், செல்வம், செல்வாக்கும் சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கை சிறப்புடன இருக்கும்.

பெண்களின் நட்சத்திர பலன்கள்

ஜென்ம நட்சத்திரத்தை வைத்துப் பெண்களின் குணாதிசயங்களைக் கணிக்க முடியும்.
1. அசுவினி : கவர்ச்சியானவர்கள், கனிவானவர்கள், சுத்தமானவர்கள், கடவுள் பக்தி அதிகமிருக்கும்.
2. பரணி : சுத்தமில்லாதவர்கள், சண்டைகளை விரும்புபவர்கள், வஞ்சகம் மிக்கவர்கள், திரை மறைவில் தீமை புரிபவர்கள்.
3. கிருத்திகை : கொள்கைப் பிடிப்பற்றவர், கோபம் அதிகமிருக்கும், சண்டை போடுபவர்கள், சுற்றத்தை வெறுப்பவர்கள்.
4. ரோகிணி : செல்வம் படைத்தவர்கள், அழகானவர்கள், மூத்தோரை மதிப்பவர்கள்.
5. மிருகசிரிடம் : சுகாதாரமானவர்கள், அழகானவர்கள, ஆடை, ஆபரண யோகம் பெற்றவர்கள், தரும காரியங்களில் ஈடு பாடு உடையவர்.
6. திருவாதிரை : குரோத குணமும், நய வஞ்சகமும் படைத்தவர்கள், ஆத்திரம் மிக்கவர்கள். வீண் செலவு செய்பவர்கள்.
7. புனர்பூசம் : பண்பானவர்கள், அடக்க மானவர்கள், அழகும், லட்சணமும் மிக்க கணவரைப் பெறுவார்கள். சுய கவுரவம் படைத்தவர்கள்.
8. பூசம் : வீடு, நிலம், வாகனம் ஆகிய வளங்களைப் படைத்தவர்கள். அழகானவர்கள்.
9 ஆயில்யம் : அழுது ஆர்ப்பரிப்பவர். ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசுபவர், விசுவாசமில்லாதவர்கள், ரகசியம் காக்கத் தெரியாதவர்கள்.
10. பூரம் : சந்தோஷ சல்லாபம் மிக்கவர், செல்வாக்கு மிக்கவர், நீதி நெறி வழி நடப்பவர், தைரியமானவர்கள்.
11. உத்திரம் : சரச சல்லாபத்தை அனுபவிப்பவர், ஒழுக்கமானவர்கள்.
12. அஸ்தம் : சுகபோகமாக வாழ்வார்கள், கவர்ச்சியானவர்கள், நுண்கலை வல்லுநர்கள்.
13. சித்திரை : வனப்பும், வசீகரமும் உடையவர்கள், அழகானவர்கள்.
14. சுவாதி : ஒழுக்கமானவர், நல்லோர் நட்பைப் பெற்றவர், எதிர்ப்பை வெல்லும் குணமுடையோர்.
15. விசாகம் : சாஸ்திர, சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப் பவர், அறிவாற்றல் மிக்கவர்கள்.
16. அனுஷம் : தியாக குணம் படைத்தவர்கள், பொதுச் சேவையில் நாட்டம் உடையவர்கள்.
17. கேட்டை : சத்திய நெறி காப்பவர், சந்தோஷமானவர்கள், சுற்றத்தாரை நேசிப்பவர்.
18. மூலம் : குரோதமானவர்கள், வெறுப்பும், விகற்பமும் மிக்கவர்கள்.
19. பூராடம் : குடும்பத்தில் சிறந்தவர்கள், அதிகார அந்தஸ்து மிக்கவர்கள்.
20. உத்திராடம் : பேரும், புகழும் மிக்கவர்கள், சந்தோஷமும், சல்லாபமும் அனுபவிப்பவர்கள். உல்லாசவாசிகள்.
21. திருவோணம் : பிறருக்குச் சேவை செய்பவர்கள், நம்பிக் கையும், நேர்மையும் மிக்கவர்கள், இரக்க மனம் படைத்தவர்கள்.
22. அவிட்டம் : சகல சவுபாக்கியங்களையும் பெற்றவர்கள், பெருந் தன்மையானவர்கள், கருணை மிக்கவர்கள், நேர்மையானவர்கள்.
23. சதயம் : பிற பெண்களை நேசிப்பவர்கள், சுற்றத்தாரால் விரும்பப்படுபவர்கள், கலகலப் பாக இருப்பவர்கள்.
24. பூரட்டாதி : சமுதாயத்தில் உயர் அந்தஸ்து பெற்றவர்கள், அறிவானவர்கள், கல்வி மற்றும் கலைகளில் வல்லவர்கள்.
25. உத்திரட்டாதி : பாசமானவர்கள், அறிவும், ஆற்றலும் மிக்கவர்கள், உண்மையை விரும்புபவர்கள்.
26. ரேவதி : சம்பிரதாயங்களை மதிப்பவர்கள், கட்டுத்திட்டங்களுக்கு மதிப்பு கொடுப்பவர்கள், நேசம் மிக்கவர்கள்.
27. மகம் : ஆசார, அனுஷடானங்களை அனுசரிப்பவர்கள், பாசம் மிக்கவர்கள்.