வேலையா தொழிலா எது உங்களுக்கு வெற்றியை தரும்?

வெற்றி என்பது மனிதனுக்கு மிகவும் அவசியம். அதுவும் தான் பார்க்கும் தொழில் அல்லது வேலையில் வெற்றி என்பது மிக மிக அவசியம்.வெற்றி எனபது ஒருவருக்கு தான் பார்க்கும் வேளையில் எப்படி கிடைக்கும்?

தான் ஈடுபட்டுள்ள தொழில் அல்லது வேலையில்   தன்னுடைய மனதை முழுமையாக  ஈடுபடுத்தி கொண்டு செய்யும்போது அங்கு வெற்றி என்பது சுலபமாகி விடுகிறது.

ஒருவருக்கு தான் செய்யும் வேலையில் வெற்றி கிடைக்கும்போது தன்னுடைய உழைப்புக்கு ஏற்ற பண வரவும் அல்லது அதற்க்கு மேலும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

இந்த உலகத்தில் தனக்கும் தன்னுடைய குடும்பத்தை சார்ந்தவர்களும் சந்தோசமாக இருக்க பணம் ஒரு முக்கியமான கருவியாகும். அந்த பணமும் தேவையான அளவு இருந்தால்தான் ஒருவருடைய வாழ்க்கையில் சந்தோசத்தை எதிர் பார்க்க முடியும். தேவையான பணம் என்பது ஒருவர் தான் பார்க்கும் தொழில் மற்றும் உத்யோகதில்தான் சம்பாதிக்க முடியும். நான் இங்கு கூறுவது நியாயமான தொழில் மற்றும் வேலையை மட்டுமே.

ஒருவருக்கு தனக்கு பிடித்தமான தொழில் அல்லது வேலையை செய்யும்போது அவரையும் அறியாமல் அந்த தொழிலில் அல்லது வேலையில் அவருக்கு ஒரு பிடிப்பு உண்டாகிறது. பிடித்தமான தொழிலை செய்யும்போது அவருக்குள்ள திறமை அவர் செய்யும் தொழில் மற்றும் வேலையில்  பிரதிபலிக்கின்றது.

இதை உணராமல் ஒருவர் தான் செய்யும் தொழில் அல்லது வேலையை அல்லது தனக்கு பிடித்தம் இல்லாத வேலையை அல்லது தொழிலை செய்யும்போது போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகின்றார்.

சிலர் சூழ்நிலை காரணமாக ஏதோவொரு வேலையை அல்லது தொழிலை செய்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் அதில் அவர்களுக்கு போதிய வருமானமும் இருக்காது. கடமைக்காக அந்த தொழிலையும் வேலையையும் செய்து வருவர்.

சரி ஒருவருக்கு பொருத்தமான தொழில் அல்லது வேலை என்ன? எந்த தொழில் அல்லது வேலையில் ஒருவர் பண பிரச்சனையில்லாமல் இருக்க முடியும்? அது போன்ற தொழில் அல்லது வேலையை எப்படி தெரிந்து கொள்வது அல்லது தேர்ந்தெடுப்பது?

ஜோதிட ரீதியாக இதற்க்கு தீர்வு உண்டா? ஒருவருக்கு வெற்றி தரும் தொழில் அல்லது வேலையை ஜாதகத்தின் மூலமாக கண்டறிய முடியுமா? நிச்சயமாக முடியும்.

ஜாதகம் என்பது ஒவ்வொரு மனிதர்களின் வாழ்கையின் அணைத்து அம்சங்களையும் பிரதிபலிப்பது. வாழ்க்கையின் ஒவ்வொரு அமசமும் அதாவது ஒருவருடைய குணம், குடும்பம், தொழில், வேலை, குழந்தைகள், வீடு, வாசல், தாய், தகப்பன், பாவம், புண்ணியம், நோய், எதிரிகள், கணவன், மனைவி, ஆயுள், பூர்வீக சொத்து, செய்யும் தொழிலில் லாபம், நஷ்டம், பயணங்கள், கணவன் மனைவி தாம்பத்திய உறவு, சுகமான தூக்கம் போன்றவைகளை ஜாதகம் கண்ணாடி போல பிரதி பலிக்கின்றது.

எனவே ஒருவர் தனக்கு எந்த மாதிரியான தொழில் அல்லது வேலை வெற்றியை தரும் அல்லது பண பற்ற குறையை நீக்கும் என்பதை தனஸ்தானம் என்னும் கட்டத்தை வைத்தும், கர்ம ஸ்தானம் என்னும் கட்டத்தை வைத்தும், லாப ஸ்தானம் என்னும் கட்டத்தை வைத்தும் இதர கிரக நிலைகள், பார்வைகள், கூட்டணி இவற்றை வைத்து சுலபமாக கண்டு கொள்ளலாம். அதை வைத்து  அந்த தொழில் அல்லது வேளையில் ஈடுபடலாம் அல்லது தற்பொழுது சம்பந்தம் இல்லாத தொழில் அல்லது வேலை பார்த்து கொண்டு இருந்தால் அந்த தொழிலை அல்லது வேலையை மாற்றி கொண்டு சந்தோசமாக இருக்கலாம்

இன்னும் சிலர் தொழில் தான் அவர்களுக்கு வெற்றி தரும் என்று ஜாதக பிரகாரம் இருந்து மாத சம்பளத்திற்கு வேலை செய்து கொண்டு இருப்பார்கள். இன்னும் சிலர் தொழில் சரியாக வராது என்று ஜாதக பிரகாரம் இருந்து தொழிலில் நஷ்டப்பட்டு கொண்டு இருப்பார். அதுபோன்று இருப்பவர்கள் மாத சம்பளத்திற்கு செல்வது உத்தமம்.  எனவே ஜாதகம் எனும் அருமையான கண்ணாடியை வைத்து பொருத்தமான தொழில் அல்லது வேலையை தேர்ந்தெடுத்து சந்தோசமாக வாழலாம்.

ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள