நவக்கிரக ஸ்தலங்களை தரிசிக்கும் முன் வணங்கவேண்டிய ஆலயம் !

அருள்மிகு பிராணநாதேஸ்வரர் திருக்கோயில், திருமங்கலக்குடி தஞ்சாவூர் மாவட்டம்.

நவகிரக தலங்களில் சூரிய தலமான சூரியனார் கோயிலுக்கு செல்லும் முன்பு இத்தலத்துக்கு வந்து வழிபட வேண்டும் என்பது முக்கியமாதலால் நவகிரக தோஷமுள்ள பக்தர்கள் இத்தலத்தில் வந்து வழிபட்ட பின்னரே சூரியனார் கோயில் செல்கின்றனர். தீர்க்க சுமங்கலி பாக்கியம் : திருமணம் ஆன பெண்கள் அம்பாள் கையிலிருந்தே திருமாங்கல்ய கயிறு வாங்கி அணிந்து கொள்வது இத்தலத்தில் மிகவும் விசேசம்.

தவிர நவகிரக தோஷம், பெண்கள் திருமண பாக்கியம்,குழந்தை பாக்கியம்,  சுமங்கலி பாக்கியம், சத்ருபயம்(எதிரிகள் பயம்) நீக்கம்பெறல்,  திருட்டுபயம் விடுபடுதல் ஆகியவற்றுக்காக பக்தர்கள் பெருமளவில் இத்தலத்தில் வழிபாடு செய்கிறார்கள்.

நவக்கிரகங்களின் தோஷங்களையே நீக்கிய இத் திருத் தலத்தினை வழிபட்ட பின்னரே சூரியனார் கோவில் சென்று வழிபட வேண்டும். நோய்கல் தீர்க்கும் திருத்தலம் இது. வியாதி உள்ளவர்கள், கார்த்திகை மாதம் முதல் ஞாயிறு துவங்கி தொடர்ந்து 11 ஞாயிற்று கிழமைகள் வெள்ளெருக்கு இலையில் தயிர் அன்னம் நைவேத்யம் செய்து வழிபட்டு அப் பிரசாதத்தினை உட்கொண்டால் வியாதிகள் அனித்தும் முற்றிலும் நீங்கப் பெறலாம். மங்கள விமானம், மங்கள விநாயகர், மங்கள நாயகி, மங்கள தீர்த்தம் மற்றும் மங்கள கோயில் என “பஞ்சமங்கள ஷேத்திரமாக” விளங்கும் திருத்தலம் இது

உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது நீங்கள் , நவ கிரக யாத்திரை தொடங்குவதாக இருந்தால் , முதலில் இந்த ஆலயம் சென்று விட்டுப் பின், நவ கிரக ஸ்தலங்களுக்குச் செல்லவும் !

நவக்கிரக கோயில்கள் கும்பகோணம்

சூரியனார் கோவில்

சூரியன்

ஸ்தலம்: சூரியனார் கோவில்
நிறம்: சிவப்பு
தானியம்: கோதுமை
வாகனம்: ஏழு குதிரை பூட்டிய தேர்
மலர்: செந்தாமரை
உலோகம்: தாமிரம்
நாள்: ஞாயிறு
ராசிகற்கள்: மாணிக்கம்
பலன்கள்: காரிய சித்தி.

கிமு 1100-ல் ஆண்டு முதலாம் குலோத்துங்க மன்னரால் கட்டப்பட்ட இக்கோவில் சுவாமிமலையிலிருந்து 21 கி.மீ தொலைவில் உள்ளது. இக்கோவிலில் குடிகொண்டுள்ள சூரியனார் ஆரோக்கியம்,
வெற்றி, வாழ்வில் செழுமை ஆகியவற்றை அளிக்க வல்லவர். பயிர், பச்சைகள் செழித்துவளர
ஓளிவழங்கும்  சூரியனாருக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் பிப்ரவரி மாதத்தில் அறுவடைதிருவிழா கொண்டாடப்படுகிறது.
திங்களூர் கைலாசநாதர் கோயில்

சந்திரன்

ஸ்தலம்: திங்களூர்
நிறம்: வெள்ளை
தானியம்: அரிசி
வாகனம்: வெள்ளை குதிரை
மலர்: வெள்ளரளி
உலோகம்: ஈயம்
நாள்: திங்கள்
ராசிகற்கள்: முத்து
பலன்கள்: தடங்கல் நீங்கும், முன்னேற்றம் ஏற்படும்.

இக்கோவில்  கட்டப்பட்ட  காலம் கி.மு  7-ஆம் நூற்றாண்டாக  இருக்ககூடுமென
கருதப்படுகிறது. சந்திரகடவுளுக்காக அமைக்கப்பட்ட  இக்கோவிலுக்கு சென்று வருவதால் நீண்ட  ஆயுளும்,
சுகமான வாழ்வும் கிடைக்கப் பெறும். ஜோதிட சாஸ்திரப்படி, சந்திரனார் துன்பங்களையும்,
துயர்களையும் துடைக்கவல்லவர்.
சீர்காழி வைத்தீசுவரன் கோயில்

செவ்வாய்

ஸ்தலம்: வைதீஸ்வரன் கோவில்
நிறம்: சிவப்பு
தானியம்: துவரை
வாகனம்: ஆட்டுக்கடா
மலர்: செண்பகம்
உலோகம்: செம்பு
நாள்: செவ்வாய்
ராசிகற்கள்: பவழம்
பலன்கள்: பகைவர்களை வெற்றி கொள்ளுதல், சகல சாஸ்திர ஞானம்
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்

இக்கோவில் அங்காரகன் எனப்படும் செவ்வாய் கடவுளுக்கு தனி சந்நிதானம் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கடவுளை வணங்குபவருக்கு தைரியம், வெற்றி பலம் ஆகியவை கிட்டும் என நம்ப்படுகிறது. இக்கோவிலுக்குள் நுழைந்தவுடன் பக்தர்கள் ‘சித்தமிருத்தா’ குளத்திற்குச் சென்று தங்களை
தூய்மைப்படுத்திக் கொள்வது வழக்கம். இத்தண்ணீருக்கு தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளை
சுகப்படுத்தும் தன்மை உண்டு என்றும் நம்பப்படுகிறது.

புதன்

ஸ்தலம்: திருவென்காடு
நிறம்: பச்சை
தானியம்: பச்சைபயிர்
வாகனம்: குதிரை
மலர்: வெண்காந்தல்
உலோகம்: பித்தளை
நாள்: புதன்
ராசிகற்கள்: மகரந்தம்
பலன்கள்: சகல சாஸ்திரம் மற்றும் ஞானம்

வால்மீகி ராமாயணத்தில் இத்திருத்தலம்பற்றிய குறிப்பு உள்ளது. எனவே 3000 வருடங்களுக்கு
மேலான பழமை  வாய்ந்த  இக்கோவில்  புதனாருக்காக  ஏற்படுத்தப்பட்டதாகும்.  நவக்கிரக
கோயில்களில் திருவெங்காடு கடைசிக் கோவிலாகும்.புதனின் அருள்பார்வையால் அறிவும்,புத்தி
சாதூர்யமும் கிட்டும்.
ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில்

குரு

ஸ்தலம்: ஆலங்குடி
நிறம்: மஞ்சள்
தானியம்: கொண்டை கடலை
வாகனம்: அன்னம்
மலர்: வெண்முல்லை
உலோகம்: பொன்
நாள்: வியாழன்
ராசிகற்கள்: புஷ்பராகம்
பலன்கள்: சகல சம்பந்துக்கள், மற்றும் வித்தைகள் தேர்ச்சி

குருவிற்கான  தலமாகும். இங்கு  குருவின் அதிபதியான தட்சணாமூர்த்தி கடவுள் ஆராதிக்கப்
படுகிறார். மற்ற கோள்களுக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி ஆகும்போது இத்தலத்தில் சிறப்பு
பூஜைகள் செய்யப்படுவதால் பக்தர்கள் கூட்டம்  அலைமோதும்  சிவபெருமானிடமிருந்து  பிரிந்த
பார்வதிதேவி  மீண்டும் சிவனுடன் இணைவதற்கு முன் இங்குள்ள அமிர்தபுஷ்கர்னி கரையில்
பிறப்பெடுத்ததாக புராணம் கூறுகிறது.
கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில்

சுக்கிரன்

ஸ்தலம்: கஞ்சனூர்
நிறம்: வெள்ளை
தானியம்: மொச்சை
வாகனம்: கருடன்
மலர்: வெண்தாமரை
உலோகம்: வெள்ளி
நாள்: வெள்ளி
ராசிகற்கள்: வைரம்
பலன்கள்: விவாகம் மற்றும் பிராப்தம் செளபாக்கியம் மலட்டுத்தன்மை நீங்கும்

சிவதலமான  கஞ்சன்னூர்  சுக்கிரனின்  தலமாக கருதப்பட்டு  மதுரை  ஆதினத்தால் பாதுகாக்கப்
பட்டு வருகிறது. திருவாவடுதுறை என்ற இடத்தில் இவ்வூர் உள்ளது இத்திருத்தலம்  பாலசவனம்,
பிரம்ம்புரி அக்னிஸ்தலம் என்றும் அறியப்படுகிறது. சிவ, பார்வதி திருமண காட்சியை பிரம்மா
இத்தலத்திலிருந்து கண்டதாக  கூறப்படுகிறது. கணவன்மார்கள் தங்களின் மனைவியரின்
நல்வாழ்விற்காக இங்கு வந்து வணங்கி செல்வதுண்டு.
திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்

சனி

ஸ்தலம்: திருநள்ளாறு
நிறம்: கருப்பு
தானியம்: எள்
வாகனம்: காகம்
மலர்: கருங்குவளை
உலோகம்: இரும்பு
நாள்: சனி
ராசிகற்கள்: நீலம்
பலன்கள்: வியாதிகள், பயம், மற்றும் தீராத கடன்கள் நீங்கும்

இத்தலம் சனிபகவானுக்கென உள்ள ஒரே தலமாகும். மற்ற கோள்களுக்கு சனி பகவான்
இடபெயர்ச்சி செய்யும்  தினத்தன்று  லட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு
வருகைபுரிவார்கள். நளமகராஜன் சனியின்  பார்வையால்  ஏற்பட்ட இடர்களை இங்கு
எழுந்தருளியுள்ள சனிபகவானை  வணங்கியபின் நீங்கப்பெற்றார். பல்வேறு தீர்த்தக்குளங்களில்
நளதீர்த்தம் மிகவும் முக்கியமானதாகவும். இக்குளத்தில் குளிப்பதனால் ஒருவரது தீமைகள்
விலகிவிடும் என நம்பபடுகிறது.
திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்

ராகு

ஸ்தலம்: திருநாகேஸ்வரம்
நிறம்: கரு நிறம்
தானியம்: உளுந்து
வாகனம்: ஆடு
மலர்: மந்தாரை
உலோகம்: தாமிரம் மற்றும் கருங்கல்
நாள்: ஞாயிறு
ராசிகற்கள்: கோமேதகம்
பலன்கள்: எந்த காரியத்திலும் ஜெயம் அடைதல்

நவக்கிரங்களில் ஒன்றான ராகுவிற்கான திருத்தலமாகும். புராணங்களில் கூறப்பட்டுள்ள
ஆதிசேஷன், தக்ஷன்,  கார்கோடகன்  எனும்   சர்ப்பங்கள்  சிவபெருமானை  இங்கு  வழிப்பட்டதாக
கூறப்படுகிறது. திருநள்ளாறு போன்றே இத்திருத்தலத்திலேயும் நளன் சிவனை வழிப்பட்டது
குறிப்பிடதக்கது.
கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில்

கேது

ஸ்தலம்: கீழ்பெரும் பள்ளம்
நிறம்: பல நிறம்
தானியம்: கொள்ளு
வாகனம்: சிங்கம்
மலர்: செவ்வள்ளி
உலோகம்: கருங்கல்
நாள்: ஞாயிறு
ராசிகற்கள்: வைடூரியம்
பலன்கள்: வறுமை, வியாதிகள் நீங்கும்.

இத்தலம் மிகவும் பழமை வாய்ந்த சிவதலமாகும்.நவக்கிரகங்களில் ஒன்றான கேது பகவான்
சிவனை இங்கு வழிப்பட்டார். கேது பகவானிற்காக வரு தனி மூலஸ்தானம் இக்கோவிலில்
உள்ளது. தேவர்கள் பாற்கடலை  கடைய  உதவியாக  இருந்த  வாசுகி  நாகத்திற்கு  ராகுவும்,
கேதுவும்  உதவியதாக
புராணங்கள் கூறுகின்றன.

Navagraha temples located in Chennai

Kolappaakkam Sri Agatheeswarar Temple
Navagraha Sthalam for Sri Suryan

Somangalam Sri Somanaadheeswarar Temple
Navagraha Sthalam for Sri Chandran

Poondhamalli Sri Vaidheeswarar Temple (Uthara Vaidheeswaran Koil)
Navagraha Sthalam for Sri Angaaragan

Kovur Sri Sundhareswarar Temple
Navagraha Sthalam for Sri Budhan

Porur Sri Ramanaadheswarar Temple (Uthara Raameswaram)
Navagraha Sthalam for Sri Guru

Maangaadu Sri Velleeswarar Temple
Navagraha Sthalam for Sri Sukran

Pozhichalur Sri Agatheeswarar Temple (Vada Thirunallaaru)
Navagraha Sthalam for Sri Saneeswarar

Gerugambaakkam Sri Neelakandeswarar Temple
Navagraha Sthalam for Sri Kethu

Kunrathur Sri Naageswarar Temple (Vada Thirunaageswaram)
Navagraha Sthalam for Sri Raahu