பிறந்த ராசிக்கு ராசியான ஸ்தலம் எது?

நாம் எத்தனையோ கோவில்களுக்கும், வழிபாட்டு தலங்களுக்கும் செல்கிறோம். என்றாலும் கூட நமது ராசிக்கு ஏற்ற ஸ்தலம் எது என தெரிந்து கொண்டு அதற்கேற்ப வழிபட்டு வருவோமானால் நம் வாழ்வு இன்னும் சிறப்பாக அமையும்.

இதோ ஒவ்வொரு ராசிக்காரர்களும் செல்ல வேண்டிய ஸ்தலங்களின் விபரம் பின்வருமாறு:

ராசி – ஸ்தலம்

மேஷம் – ராமேஸ்வரம் ராமநாதர்
ரிஷபம் – மேல் திருப்பதி வெஙகடேச பெருமாள்
மிதுனம் – திருவெண்காட்டில் புதன் சன்னதி
கடகம் – சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாம சுந்தரி சன்னதி எதிரே உள்ள நவலிங்கம்
சிம்மம் – நன்னிலம் அருகில் ஸ்ரீவாஞ்சியம் என்ற ஊரில் உள்ள மங்களாம்பிகை
கன்னி – திருக்கழுக்குன்றம் மலை மேல் வேதகிரீஸ்வரர்
துலாம் – திருத்தணி முருகன்
விருச்சிகம் – காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை பவுர்ணமியில் வழிபடுதல்
தனுசு – ராமநாதபுரம் அருகில் தேவிபட்டணத்தில் கடலில் உள்ள நவக்கிரகம்(நவபாஷாணம்)
மகரம் – காசியில் உள்ள விஸ்வநாதர்
கும்பம் – கும்பகோணத்தில் கும்பேஸ்வரர்
மீனம் – மதுரை மீனாட்சி கோவிலில் உள்ள சொக்கநாதர் மற்றும் மீனாட்சி.