உங்கள் மகன்/ மகள் கல்வியில் நல்ல மதிப்பெண் பெற என்ன வழிபாடு? மந்திரம்? ஜோதிட பரிகாரம்

காங்கேயம் சிவன்மலை முருகன் குருவின் அம்சம். கல்வியில் முன்னேற்றம் அடைய இந்த முருகனை வழிபட்டால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

கல்வியில் நல்ல மதிப்பெண் பெற ஜாதகத்தில் லக்னத்துக்கு இரண்டாம் இடத்தில் சுபர் இருக்கனும் 4ல் சுபர் இருக்கனும் குரு, புதன் கெடாமல் பாவிகளுடன் சேராமல் இருக்கனும்…2,4ல் கேது இருக்க கூடாது புதனுடன் கேது சேரக்கூடாது. குரு திசையோ புதன் திசையோ படிக்கும் காலத்தில் நடந்தால் அக்குழந்தைகள் படிப்பில் நல்ல மதிப்பெண் பெறுகிறார்கள்.
அருகில் இருக்கும் முருகன் கோயிலில் வியாழன் தோறும் நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்…அம்மா மட்டும் விழுந்து விழுந்து சாமி கும்பிட்டா போதாது மகன் மகளையும் அப்படி பழக்கனும்..அவனுக்கு சாமின்னாலே பிடிக்காது நீயே கும்பிடுன்னு எரிஞ்சு விழுவான் என சில பெற்றோர் பெருமையாக சொல்வார்கள்…இது தப்பு ..சின்ன வயதில் இருந்து நாம் பழக்கவில்லைஎன்று அர்த்தம். அவன் இஷ்டத்துக்கு இன்று அவனை விடும்போது நாளை அவன் தன்னை யார் கேட்பா என துணிச்சலை கொடுத்துவிடும்.
முருகன் கோயில் அல்லது அரசு வேம்பு இணைந்து இருக்கும் வினாயகர் கோயிலில் உங்கள் குழந்தையை தினசரி காலையில் 3 முறை வலம் வந்து வழிபட்டு பின் படிக்க சொல்லுங்கள்..இது தேர்வு நேரத்தில் கூட செய்யலாம் இதனால் மனதில் தன்னம்பிக்கையும் அதிகரித்து மனதில் பயம் குறையும்…கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்..அரச மரமும் வேப்பமரமும் குருவின் அம்சம்..குரு ஞானம் எனும் கல்வியை கொடுக்கும் கிரகம்.கடவுள் பார்த்துப்பார் என்ற நம்பிக்கை வந்தால் உங்கள் மகன் பதட்டமில்லாமல் தேர்வு எழுதுவான்… நல்ல மதிப்பெண்ணும் பெறுவான்..
மாணவ-மாணவிகள் படிப்பில் தேர்ச்சி பெற மகத்தான பரிகாரம் !
சில பிள்ளைகளுக்கு மறதி அதிகமாக இருக்கும். எதைச் சொன்னாலும் அடுத்த நிமிடமே மறந்து விடுவார்கள். சில பெரியவர்கள் கூட ஒரு காரியத்தை அவர்களிடம் செய்யச் சொல்லிய போது, அதை செய்யாமல், மறந்து விட்டால், ‘ஆஹா, மறந்து விட்டது, நாளை செய்கிறேன்’ என்பார்கள்.
‘மறதி’ என்ற மூன்று எழுத்துக்குள்ளேயே ‘மதி’ என்ற இரண்டெழுத்தும் இருக்கிறது. ‘மதி’ என்றால் சந்திரன் என்று பொருள். சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் தான் நினைவாற்றல் நன்றாக இருக்கும். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள இயலும்.
மேலும் ஜாதகத்தில் ‘ஞானகாரகன்’ கேதுவும், ‘வித்யாகாரகன்’ புதனும், படிப்பு ஸ்தானத்தோடு சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் கல்வியிலும் தேர்ச்சி பெற்றவராக விளங்க முடியும். மறதி இல்லாத மனிதராக வாழ்ந்து மகத்தான சாதனைகளைப் படைக்க முடியும்.
சரஸ்வதிக்கு என்று கூத்தானூரில் கோவில் இருக்கிறது. சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியிலும் சரஸ்வதிக்கென்று தனிக் கோவில் இருக்கிறது. இது போன்ற கோவில்களுக்கும், ஹயக்ரீவர் வீற்றிருக்கும் ஆலயங்களுக்கும்,கேதுவிற்குரிய புராதனக் கோவில்களுக்கும், ஞானாம்பிகை வடிவில் அம்பிகை வீற்றிருக்கும் ஆலயங்களுக்கும் படிப்பில் குறைபாடுள்ள பிள்ளைகளை அவரவருக்குப் பொருந்தும் நாளில், யோகபலம் பெற்ற நாளில் அழைத்துக் கொண்டு சென்று வழிபாடு செய்ய வேண்டும்.இவ்வாறு செய்து வந்தால் அவர்கள் கல்வியில் தேர்ச்சி பெற்றவராகவும், காசினியோர் போற்றும் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்களாகவும் மாறுவர்.